கடந்த 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் "வேட்டையாடு விளையாடு". இந்த திரைப்படத்தில் ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சுபேஸ், முமைத் கான், அதுதி சர்மா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது, அதற்கு முன்னர் வெளியான "படையப்பா" படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை பலரின் விருப்பப்பட்டியலில் முன்னணி இடம் வகிக்கிறது.
மேலும் படிக்க | இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகும் பிரபல நடிகர்?
பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலைகாரர்களை பிடிக்க நேர்மையான போலீஸ் அதிகாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், இதனால் அவர் வாழ்வில் சந்திக்கும் சில இடர்களையும் இப்படம் காட்டியுள்ளது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பொதுவாக படங்கள் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம் பாகம் உருவாகுவது வழக்கம், அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தகவல்கள் வெளியானது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்த செய்தியை படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் நிலையில் உள்ளது. இப்படம் குறித்து ஏற்கனவே ஒருதடவை நான் கமலிடம் பேசிவிட்டேன், தற்போது மீண்டும் இதுகுறித்து பேசப்போகிறேன்' என்று தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கமலின் 'விக்ரம்' படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'வேட்டையாடு விளையாடு' படம் பற்றிய செய்தி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஏப்ரல்-1 யூடியூப் ‘ஜாம்’ ஆவது உறுதியாம்! - ஏன் தெரியுமா?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR