Viral Video: ஆதிவாசி வேடத்தில் அமீர்கான்... மும்பை சாலையில் சுற்றிவருவதும் அவரா...?

Mumbai Caveman Actor Amir Khan: மும்பை சாலை ஆதிவாசி வேடத்தில் சுற்றித் திரிந்த வைரல் நபர், பாலிவுட் நடிகர் அமீர்கான் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2025, 01:35 PM IST
  • அமீர்கான் நடிப்பில் கடைசியாக 2022இல் திரைப்படம் வெளியானது.
  • லால் சிங் சத்தா திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
  • அடுத்து இந்தாண்டு டிசம்பரில்தான் அமீர்கான் திரைப்படம் வெளியாகிறது.
Viral Video: ஆதிவாசி வேடத்தில் அமீர்கான்... மும்பை சாலையில் சுற்றிவருவதும் அவரா...? title=

Mumbai Caveman Actor Amir Khan Fact Check: நடிகர்கள் தாங்கள் நடித்த திரைப்படங்களை விளம்பரப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். ஆடியோ வெளியீடு, டீசர் வெளியீடு, செய்தியாளர் சந்திப்பு, திரையரங்குகள் விசிட், நேர்காணல்கள் என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி திரைப்படங்களை விளம்பரப்படுத்துவார்கள். 

சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த, அதன் கதாநாயகன் மணிகண்டன் பல்வேறு நேர்காணல்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, அவர் நேர்காணலில் மிமிக்ரி செய்து, நகைச்சுவையாக பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. படமும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இருப்பதால், மணிகண்டனின் இந்த வீடியோக்களும் கூடுதல் வசூலுக்கு வழிவகுத்தது என்கின்றனர் சினிமா வட்டத்தினர்.

ஆதிவாசி வேடத்தில் அமீர்கான் 

இது படங்களுக்கு மட்டுமில்லை, எந்தொவொரு விஷயத்தையும் விளம்பரத்த, பிரபலப்படுத்த தனித்துவமாக, வித்தியாசமான முயற்சிகளை செய்வார்கள். அந்த வகையில்தான், Thumps Up குடிபானத்தை விளம்பரம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆதிவாசி வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஆதிவாசி மேக்-அப் போடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருந்தது.

மேலும் படிக்க | சமந்தாவின் புதிய காதலர் இவரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

வைரலான மும்பை ஆதிவாசி?

அதேபோல், ஆதிவாசி மனிதரை போன்ற ஆடையுடன், அதிக தலைமுடியுடன், மிகுந்த தாடியுடன் ஒரு நபர் மும்பை சாலைகளில் அலைந்து திரியும் வீடியோக்கள், புகைப்படங்கள் சில நாள்களாகவே சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. தள்ளுவண்டிகளை தள்ளுவது, பிளாஸ்டிக் பொருள்களை அள்ளுவது என அந்த நபர் வினோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

அந்த வகையில், விளம்பர நடவடிக்கைகளுக்காக அமீர்கான் தான் சாலைகளில் ஆதிவாசியை போல நடமாடுகிறார் என அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால், இது உண்மையா, பொய்யா என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அது அமீர்கான் இல்லை

அமீர்கானுக்கு நெருங்கிய வட்டாரம் இதுகுறித்து அளித்த தகவலில்,"மும்பை சாலைகளில் ஆதிவாசி போன்ற உடையில் சுற்றித் திரியும் நபர் அமீர்கான் அல்ல. தயவுசெய்து இதுபோன்ற எந்த தகவல்களை நம்ப வேண்டாம், ஏனெனில் அவை அனைத்தும் போலியானவை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீர்கான் நடிப்பில் வரும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'சீதாரே ஜமீன் பர்' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கடைசியாக அமீர்கான் நடிப்பில் 2022ஆம் ஆண்டில்தான் திரைப்படம் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படம் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெறாதது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கோலாகலமாக நடைபெற்ற சித்தா இயக்குனர் அருண் குமார் திருமணம்! புகைப்படங்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News