Budget 2025: ரயில்வே துறைக்கு பெரிய ஷாக்... பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் வந்துச்சா, இல்லையா...!

Union Budget 2025: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறை சார்ந்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இங்கு காணலாம்.

Railway Budget 2025: 1924ஆம் ஆண்டில் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2017இல் ரயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டது. தற்போது ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1 /8

1860ஆம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1947ஆம் ஆண்டில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுதந்திரத்திற்கு 78வது ஆண்டாக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

2 /8

அதேபோல், நிதிநிலை பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்டும் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதாவது, 1924ஆம் ஆண்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் (Railway Budget 2025) தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது.   

3 /8

ஆனால், 2017ஆம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட் தனியே தாக்கல் செய்யப்பட மாட்டாது என்றும், அதுவும் நிதிநிலை அறிக்கை உடனே தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. மேலும் கடந்த 8 ஆண்டுகளாக மொத்தமாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.   

4 /8

இந்நிலையில், இன்று 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட ரயில் சேவைகள் அதிகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.   

5 /8

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களுக்கும் பல ரயில்வே திட்டங்கள் கொண்டவரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரயில்வே துறை சார்ந்து இன்றைய பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

6 /8

2025-26 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட அதே நிதிதான் இந்தாண்டும் ஒதுக்கப்படுகிறது. அதை கூட்டவோ குறைக்கவோ இல்லை.   

7 /8

இருப்பினும், ரயில்வே துறையின் மொத்த வருவாய் வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.3 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

8 /8

உள்நாட்டு பராமரிப்பு, ரயில் பழுதுபார்ப்பு மற்றும் ரயில்வே பொருட்களின் செயல்பாடுகளுக்கு சலுகை வரியுடன் வெளிநாட்டு பொருட்களை காலவரையின்றி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் 2025-26 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.