மதுரையில் விஜய் தவெக கட்சியில் இணைந்த வெற்றிமாறன்? உண்மை என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Feb 2, 2025, 05:15 PM IST
  • தவெகவில் இணைந்தாரா வெற்றி மாறன்?
  • மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பு!
  • உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மதுரையில் விஜய் தவெக கட்சியில் இணைந்த வெற்றிமாறன்? உண்மை என்ன? title=

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராசர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகிய ஐந்து அரசியல் பிரமுகர்களின் நினைவாக சிலைகளை சிறந்து தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தவேகாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | Union Budget 2025: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் இருக்கா? மீண்டும் கல்தாவா?

தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

"குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது. மக்களரசியல் மட்டுமே. தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான், நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகிகள் நியமனம்

தற்போது தமிழக வெற்றிக் கழக, நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் வெற்றிமாறன்

மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட விஜய் அன்பன் அழகர் கோவிலில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார். இந்த நிகழ்வில் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன, வெற்றியாளர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார். மேலும் தவேக நிர்வாகிகள் மிகப்பெரிய மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழக (தவேக) நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அவர் பங்கேற்றதை தொடர்ந்து பலரும் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டார் என்று ஊகித்தனர். ஆனால், தற்போது வெளியான தகவலின்படி மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தான் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. வெற்றி மாறன் தனது வரவிருக்கும் திரைப்பட வேலைகள் தொடர்பாக மதுரையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! எடப்பாடி பழனிசாமி எழுப்பிய சரமாரி கேள்விகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News