Valentine Week 2025 Schedule : எந்த சிறப்பான நாட்களை நினைவில் வைத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, பிப்ரவரி மாதம் வந்தால், கண்டிப்பாக காதலர் தினம் (Valentine's Day) 14ஆம் தேதி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாளை காதலர்கள் மட்டும் கொண்டாட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நண்பர்களுக்குள் பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசை வாங்கி கொடுக்கலாம்.
உலகளவில் 14ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த காதலர் தினத்திற்கு முன்னால் இருக்கும் 7 நாட்களும் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களிலும் அன்பை பரிமாறி, மகிழ்ச்சியாக இருக்கலாம். காதலர் தினத்திற்கு முன்னர், என்னென்ன நாட்களை கொண்டாடலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
ரோஸ் டே:
காதலர் தினக்கொண்டாட்டத்தின் ஆரம்ப நாளாக அமைந்திருக்கிறது, ரோஸ் டே. இது, பிப்ரவரி 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதல் மற்றும் ரொமான்ஸிற்கு அடையாளமக விளங்கும் ரோஸை, இந்த நாளில் உங்கள் துணைக்கு அல்லது அன்புக்குரியவர்களுக்கு கொடுத்து மகிழலாம். அப்படி நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால், அது உங்கள் பார்ட்னர் மீதிருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
பிரப்போஸ் டே:
ரோஸ் டேவிற்கு அடுத்து வரும் நாள், ப்ரப்போஸ் டே. இது, பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், திருமணத்திற்கு தயாராக இருந்தால், இந்த நாளில் ப்ரப்போஸ் செய்யலாம். அல்லது காதலை தெரிவிக்க வேண்டும் என்றால், இந்த நாளில் தெரிவிக்கலாம். இது, நீங்கள் எந்த அளவிற்கு அவர்கள் மீது உணர்ச்சிகளை வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தவும் அவர்கள் அதனை தெரிந்து கொள்ளவும் உதவும்.
சாக்லேட் டே:
ஒருவரை நமக்கு பிடித்திருக்கிறது என்றால், நாம் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது வழக்கம். இதனை காதலர் தினத்திற்கு முன்னர் கொடுக்கும் தினம்தான் சாக்லேட் டே. இதனை, பிப்ரவரி 9ஆம் தேதி கொண்டாடுவார்கள். இந்த நாளில் காதலர்களுக்குள் இனிப்புகளை பரிமாறி வாழ்வையும் இனிமையாக்கலாம்.
டெடி டே:
டெடி பியர் பொம்மைகளை, ஒரு வித சௌகரியத்தையும் பாசத்தையும் கொடுக்கும் பொம்மைகளாக பார்ப்பர். இவற்றை பிப்ரவரி 10ஆம் தேதி காதலிக்கோ/காதலனுக்கோ கிஃப்ட் ஆக கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் அவர்கள் உணர்ச்சிகளுக்க்கு பாதுகாப்பு கொடுப்பவராக விளங்குவதை சொல்லாமல் சொல்லலாம்.
ப்ராமிஸ் டே:
இந்த நாளில், நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கொடுக்க நினைக்கும் வாக்குகளை கொடுக்கலாம். இந்த நாளை பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடலாம். இந்த நாளில் உங்கள் காதல் உறவில் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள், எப்படி நியாயமாக இருப்பீர்கள், எந்த அளவிற்கு உங்கள் காதலரை உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கலாம்.
ஹக் டே:
ஒரு சின்ன கட்டிப்பிடி வைத்தியம், உங்கள் மன நிலையை முற்றிலுமாக மாற்றி விடும். இந்த நாளில், சந்தோஷம், சோகம் என என்ன உணர்ச்சியாக இருந்தாலும் அதனை உங்கள் அன்புக்குரியவர்களை கட்டிப்பிடித்து வெளிப்படுத்துங்கள். இந்த நாளில், தொடுதல் மூலம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
கிஸ் டே:
காதலர்களுக்குள், அன்புடன் பரிமாறிக்கொள்ளப்படும் விஷயங்களுள் ஒன்று முத்தம். அவை கண்ணத்தில் கொடுக்கும் முத்தமாக இருக்கலாம், மரியாதை நிமித்தமாக கையில் கொடுக்கும் முத்தமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது அன்பின் அடையாளம் ஆகும். இந்த நாள், பிப்ரவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
காதலர் தினம்:
பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தில் பூக்கள், பரிசுகள், கார்ட் என பலவற்றை வாங்கிக்கொடுத்து உங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | காதலர்கள் ‘இந்த’ 8 விஷயங்களில் லிமிட்டை தாண்டவே கூடாது!
மேலும் படிக்க | காதலர்களுக்குள் இருக்கவே கூடாத 8 கெட்ட விஷயங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ