தவறான வாழ்க்கை முறை, மற்றும் உணவு பழக்கங்களால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். மோசமான வாழ்க்கை முறை காரணமாக எப்போதும் சோர்வாகவும் எரிச்சல் உணர்வுடனும் இருப்பவர்கள் அதிகம். அதிக உடல் உழைப்புக்குப் பிறகு சோர்வாகவும் மந்தமாகவும் உணருவது இயல்பு தான். ஆனால் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக உணர்ந்தால், அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம் ஏதும் இன்றி சோர்வாக இருப்பதற்கான காரணங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தூக்கமின்மை
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான, ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூங்கும்போது, உங்கள் மூளை செல்களை சரிசெய்ய வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது. எனவே, குறைந்தது 7 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், ஆரோக்கியமற்ற சூழல், மன அழுத்தம் அல்லது நோய் உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து, சோர்வு ஏற்பட வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது சோர்வைக் குறைக்க உதவும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வீக்கம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தைத் தவிர்ப்பது கடினம், ஆனால் அதை நிர்வகிக்க முடியும். மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தினசரி உடற்பயிற்சி, தியானம், நல்ல குளியல் அல்லது ஓய்வு மூலம் குறைக்கலாம்.
மருத்துவ நிலை
சோர்வு பல மருத்துவ நிலைமைகளுடன் தொடர்புடையது. தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஹைப்போ தைராய்டிசம், புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், சிறுநீரக பிரச்சினைகள், மனச்சோர்வு, நீரிழிவு ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, சோர்வு பிரச்னை தீரும்.
மேலும் படிக்க | வெறும் 5 நிமிட உடற்பயிற்சி போதும்... ஒரே மாதத்தில் தொப்பை எல்லாம் மாயமாய் மறையும்
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்துக்கள் இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடுகள் சோர்வுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். வயது அதிகரிக்கும் போது, வளர்சிதை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு அவசியமான வைட்டமின் பி12 ஐ உறிஞ்சும் திறன் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், சோர்வு மேலே குறிப்பிட்டுள்ள சில ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை மெல்லக் கொல்லும் பிபி... கட்டுக்குள் வைக்க உதவும் சில பயிற்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ