பத்திரப்பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசு இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறது. ஜனவரி 31 ஆம் தேதி ஒருநாள் பதிவுத்துறை வருமானம் மட்டும் சுமார் 231 கோடி ரூபாய். இதே நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாய் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து. கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு. இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு
மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (நிலை) எண்:124/ஜே2/2024 நாள் 21.10.2024ன் வழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மேற்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணிசெய்யும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மங்களகரமான நாளான 03.02.2025 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான 03.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டிருந்தது.
ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
இதற்கு பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விடுமுறை நாள்.. அதுவும் ஞாயிற்றுக்கிழமை எப்படி பணிக்கு வர முடியும் என பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் பதிவுத்துறை அலுவலருக்கு கேள்வி எழுப்பினர். அத்துடன் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் தமிழ்நாடு அரசின் உத்தரவையும் மீறி பணிக்கு செல்லவில்லை. இதனால் பல இடங்களில் பத்திரப்பதிவு நடைபெறும் என சென்ற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து அரசு கவனத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ