இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்: நேரடி ஒளிபரப்பு, ஷெட்யூல், பிளேயிங் லெவன் விவரம்

India vs England | இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த தொடரின் லைவ் ஸ்டீரிமிங், ஷெட்யூல், பிளேயிங் லெவன் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2025, 01:22 PM IST
  • இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர்
  • பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது
  • பிளேயிங் லெவன், லைவ் ஸ்டீரிமிங் அப்டேட்
இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்: நேரடி ஒளிபரப்பு, ஷெட்யூல், பிளேயிங் லெவன் விவரம் title=

India vs England Live Streaming | இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வெற்றிக் கோப்பையை வென்றது. இங்கிலாந்து அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் இந்த தொடரின் முழு அட்டவணை, லைவ் ஸ்டீரிமிங், இந்தியா இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. .

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர் ஷெட்யூல்:

முதல் ஒருநாள் போட்டி:

தேதி: பிப்ரவரி 6, 2025

இடம்: விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியம், நாக்பூர்

நேரம்: மதியம் 1:30 மணி (IST)

இரண்டாவது ஒருநாள் போட்டி:

தேதி: பிப்ரவரி 9, 2025

இடம்: பாராபதி ஸ்டேடியம், கட்டக்

நேரம்: மதியம் 1:30 மணி (IST)

மூன்றாவது ஒருநாள் போட்டி:

தேதி: பிப்ரவரி 12, 2025

இடம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்

நேரம்: மதியம் 1:30 மணி (IST)

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர் அணிகள்:

இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷதீப் சிங், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெதல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், ஃபில் சால்ட், மார்க் வுட்.

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர் நேரடி ஒளிபரப்பு:

டிவி சேனல்: இந்தியாவில் இந்த தொடரின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்.

ரோகித், விராட் கோலி பார்ம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளையாட உள்ளனர். இருவரும் ஏறக்குறைய பழைய பார்மில் இல்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றனர். ஒருவேளை இந்த தொடரில் இருவரும் சொதப்பினால் சாம்பயின்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பரிசீலனை செய்யவும் பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.

இந்தியா vs இங்கிலாந்து இதுவரை 

இதுவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 107 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 58 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 44 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகள் டை ஆக முடிந்துள்ளன.

மேலும் படிக்க | MS Dhoni: 'தோனி அரசியலுக்கு வருவாரா...' பிசிசிஐ துணை தலைவர் பளீச்

மேலும் படிக்க | இந்தியா - இங்கிலாந்து 5வது டி20: ஒரே ஒரு சதம்தான்.. எல்லா ரெக்கார்டும் காலி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News