Weight Loss Journey: உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். உணவுப்பழக்கத்தில் முதல் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வரை உங்களின் உடல் எடையை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் உள்ளன.
நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தை, மோசமான வாழ்க்கைமுறையை பின்பற்றுபவராக இருந்தால் உடல் எடை எக்குத்தப்பாக உயரலாம். வளர்ச்சிதை வேகப்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, உடற்பயற்சி, உணவுமுறை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினால் நிச்சயம் நீங்கள் நினைத்த உடல் எடையில் நீடிக்கலாம்.
Weight Loss Journey: நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்
உடல் பருமனுடன் இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள். அவரக்ளுக்கு வரும் முதல் கேள்வியே நம்மால் உடல் எடையை குறைக்க முடியுமா என்பதாகதான் இருக்கும். உடல் எடையை குறைப்பது எப்படி பலர் பல பாடங்களை சொல்வார்கள். ஆனால், நீங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற வகையில், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
மேலும் படிக்க | 100 நாள்களில் 24 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைத்த காலை உணவு என்ன தெரியுமா?
அந்த வகையில், பலரின் உடல் எடை குறைப்பு பயணத்தை கேட்டாலும் பலருக்கும் தன்னம்பிக்கையும், தெளிவும் கிடைக்கும். உடல் எடையை குறைப்பதில் சாதாரண மக்களை விட நடிகர்களே அதிகமான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காரணம், அவர்களின் தொழில் சார்ந்த உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது அவசியம். மேலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் எடையை ஏற்றஇறக்க வேண்டும் என்பதால் அவர்கள் உடல் எடை குறைப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
Weight Loss Journey: 12 கிலோவை குறைத்த ஷெஹ்னாஸ் கில்
இந்நிலையில், பாலிவுட் பிரபலமும், பாடகருமான ஷெஹ்னாஸ் கில் (Shehnaaz Gill) கடந்த வருடம் தனது உடல் எடையை பெரியளவில் குறைத்திருந்தார். அதாவது, 5 மாதங்களில் 12 கிலோ வரை அவர் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவரின் அன்றாட உணவுப் பழக்கவழக்கம் குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தனித்துவமான அவல் உணவு எப்படி அவரின் உடல் எடை குறைப்புக்கு உதவியது என்பதை அதில் விளக்கியிருந்தார். அதனை இங்கு காணலாம்.
Weight Loss Journey: வித்தியாசமான காலை உணவு
புரதம் நிறைந்த காலை உணவையே அவர் சாப்பிடுவாராம். இதுகுறித்து அவர் கூறுகையில்,"என்னுடைய அவல் (Poha) ரெசிபி கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால் நான் அவலை விட காய்கறிகளையே அதிகமாக சேர்ப்பேன். அவலுடன், நான் கிரானோலா (ஓட்ஸ், நட்ஸ், விதைகள், தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை அடங்கிய உணவு) மற்றும் தயிர் ஆகியவற்றை சாப்பிடுகிறேன்" என்றார்.
Weight Loss Journey: சமச்சீரான மதிய உணவு
மதியத்திற்கு புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கார்ப்போஹைட்ரேட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை சமச்சீரான அளவில் எடுத்துக்கொள்வதாக கூறினார். பருப்பு அவரின் பிரதான உணவாக உள்ளது. முழு தானியங்கள், நாட்டு நெய்யுடன் ரொட்டி, காய்கறிகள், முளைத்த பயிர்கள் அடங்கிய சாலட் ஆகியவையே பிரதான மதிய உணவாக அவருக்கு உள்ளது.
மேலும் படிக்க | ஒரே வருஷத்தில் 60+ கிலோவை குறைத்த பெண் - அவரின் டயட் பிளான் என்ன தெரியுமா?
Weight Loss Journey: இரவு உணவு இதுதானாம்...
இரவு உணவிலும் புரதச்சத்து நிறைந்த உணவு, முழு தானியம் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வாராம். தயிர் சேர்த்த கிச்சடி மற்றும் சுரைக்காய் சூப் ஆகியவை அவரின் முக்கிய இரவு உணவாம்.
Weight Loss Journey: திடீரென பசி எடுத்தால் என்ன சாப்பிடுவார் தெரியுமா?
பசியெடுத்தாலும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் முறையையே அவர் வைத்துள்ளார். இவை அவரின் வயிறு நிரம்பவும், பசியை குறைக்கவும் உதவுகிறது. பசியெடுத்தால் இடையிடையே தாமரை விதைகளை அவர் சாப்பிடுவாராம். இது அவருக்கு நீடித்த ஆற்றலையும் வழங்குகிறது. ஷெஹ்னாஸ் கில் உடல் எடையை குறைத்ததற்கு அவரின் உணவுப் பழக்கம் கைக்கொடுத்தது என்றாலும் உடற்பயிற்சிகள், நல்ல தூக்கம் ஆகியவையும் முக்கியம். எனவே, நீங்கள் தொடர்ச்சியாக இதனை பின்பற்றினால் மட்டுமே உடல் எடை குறையும்.
(பொறுப்பு துறப்பு: இவை ஷெஹ்னாஸ் கில் பகிர்ந்த கொண்ட உடல் எடை குறைப்பு பயணம் குறித்த தகவல் மட்டுமே. இதையே நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றில்லை. இதுகுறித்து நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ