சிவகார்த்திகேயனுடன் நடிக்க 4 கண்டீஷன் போட்ட ஜெயம் ரவி! என்னென்ன தெரியுமா?

Jayam Ravi Conditions To Play Villain With Sivakarthikeyan : நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், இதில் நடிக்க அவர் 4 கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 30, 2024, 06:23 PM IST
  • சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி
  • அவர் போட்ட 4 கண்டீஷன்!
  • என்னென்ன தெரியுமா?
சிவகார்த்திகேயனுடன் நடிக்க 4 கண்டீஷன் போட்ட ஜெயம் ரவி! என்னென்ன தெரியுமா?  title=

Jayam Ravi Conditions To Play Villain With Sivakarthikeyan : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தான் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு நான்கு நிபந்தனைகள் இருப்பதாக ஜெயம் ரவி கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

சிவகார்த்திகேயன்-ஜெயம் ரவி இணையும் படம்:

கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் ஹீரோவாக விளங்கி வருகிறார் ஜெயம் ரவி. தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் மோகனின் இளைய மகனாக. ஜெயம் படம் ஜெயித்ததை தொடர்ந்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் போன்ற பல படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோவாக மாறினார். 

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த வரும் படம், பெரிதாக ரசிகர் கடை சென்று சேரவில்லை. இதனால், இவர் வில்லன் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

எந்த படம்?

நடிகர் சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்க இருந்த படம் புறநானூறு. சூரரைப் போற்று படம் வெளிவந்த புதிதிலேயே இந்த படத்தில் அறிவிப்பும் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ஷூட்டிங் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரார். இந்த படத்தில் தான் சிவகார்த்திகேயன் எனக்கு வில்லனாக வருகிறார் ஜெயம் ரவி. 

அவர் வைத்த கண்டிஷன்!

நடிகர் ஜெயம் ரவி இதற்கு முன்னர் நெகட்டிவ் ஷேடு நிரம்பிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், முழுமையாக முதல்முறையாக தற்போது ஒரு ஹீரோவுக்கு உள்ளனாக நடிக்க வருகிறார். இதில் தான் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு நாலு கண்டிஷன் இருப்பதாக அவர் படக்குழுவினரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றால் தான் கேட்கும் தொகையை சம்பளமாக தரவேண்டும் என்று வட கூற வேண்டும் கேட்டுள்ளாராம். 

SK

மேலும் படிக்க | ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..

அதேபோல சிவகார்த்திகேயன் தன்னை அடிப்பது போல ஒரு காட்சி கூட படத்தில் இருக்கக் கூடாது என ஜெயம் ரவி விதிமுறை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தான் கொடுக்கும் கால்ஷீட்டில்தான் தனக்கு படப்பிடிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். அது மட்டுமின்றி, படத்தை பிரமோட் செய்யும்போது சிவகார்த்திகேயனும் அதில் சம பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம். 
ஜெயம் ரவி, இவ்வாறு கண்டீஷன் போட்டுள்ளதாக திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் வகையிலான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

படக்குழு:

புறநானூறு படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News