மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

Depression | மன அழுத்ததிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அவை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2025, 04:54 PM IST
  • மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?
  • மன அழுத்தத்தை தவிர்க்க டிப்ஸ்
  • மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்
மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் title=

Depression side effects | மன அழுத்தத்திற்கு (Depression) பரிந்துரைக்கப்படும் மருந்துகள், பொதுவாக ஆண்டிடிப்ரசன்ட் மருந்துகள் (Antidepressants) என்று அழைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. ஆனால் அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கலாம். மருந்தின் வகை, அளவு மற்றும் நபரின் உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து பக்கவிளைவுகள் மாறுபடும்.

மன அழுத்த மருந்துகளின் பொதுவான பக்க விளைவுகள்:

வயிற்றுப் பிரச்சினைகள் : குமட்டல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாய்வு போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

தூக்கமின்மை : அதிக தூக்கம் (Sleepiness) அல்லது தூக்கம் வராமை (Insomnia) என இரண்டு வகையான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

உடல் எடை மாற்றங்கள்: இந்த மாத்திரைகளை சாப்பிடும்போது எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் எடை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

மன அழுத்த மாத்திரைகளால் ஏற்படும் பிற பிரச்சனைகள் : 

இதுதவிர தொடர்ந்து தலைவலி அல்லது மயக்கம், பாலியல் ஆர்வம் குறைதல், பாலியல் செயல்பாட்டில் சிரமம், வாய் உலர்ந்து போதல் மற்றும் மன அழுத்தம் அதிகரித்தல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம். அதிக சோர்வு அல்லது உடல் பலவீனம், கவலை, பதட்டம் அல்லது மன அமைதியின்மை, தசைகளில் வலி அல்லது விறைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை : 

மன அழுத்தத்துக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள் பொதுவாக சில வாரங்களுக்குப் பிறகு குறையும். ஆனால், பக்க விளைவுகள் தீவிரமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருந்துகளை திடீரென நிறுத்தக்கூடாது. இதனால் திரும்பும் அறிகுறிகள் (Withdrawal Symptoms) ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளின் அளவை மாற்றக்கூடாது. மன அழுத்த மருந்துகள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கின்றன, ஆனால் அவற்றின் பக்க விளைவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் மாற்று சிகிச்சை முறைகளைப் பற்றி ஆலோசிக்கலாம்.

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?

மன அழுத்தம் (Depression) என்பது ஒருவருக்கு பல காரணிகளால் ஏற்படலாம். இயற்கையாகவே மூளை நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளை தவிர்த்து இயல்பாக இருக்கக்கூடியவர்களுக்கு இந்த பிரச்சனை வர பல விடயங்கள் உள்ளன. துக்கம், தனிமை, குற்ற உணர்வு, தன்னைப் பற்றி எதிர்மறையாக சிந்தித்தல், நம்பிக்கையின்மை, வேலை இழப்பு, காதல் அல்லது திருமண வாழ்க்கை முறிவு, குடும்ப பிரச்சினைகள், நிதி பிரச்சினைகள் என இதற்கான காரணத்தை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் இருந்து மீள முடியுமா என்றால் முடியும். 

மன அழுத்தத்தை தவிர்க்க டிப்ஸ் 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்ற வேண்டும். சத்தான, சீரான உணவு முறையை பின்பற்றுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும். போதுமான தூக்கம் (7-9 மணி நேரம்) தூங்கவும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நண்பர்கள், குடும்பம் அல்லது மருத்துவரிடம் பேசுங்கள். தியானம் அல்லது யோகா பயிற்சியை செய்யவும்.

மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினை. இது சரியான முறையில் கையாளப்பட்டால் கட்டுப்படுத்தக்கூடியது. உங்கள் உணர்ச்சிகளை புறக்கணிக்காமல், உதவி கேட்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மன அழுத்தத்தை தவிர்க்க உதவும். குறிப்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | 25 கிலோவை குறைத்த டாக்டர்... அதுவும் 42 நாள்களில் - கொழுப்பை கரைக்க என்ன செய்தார்?

மேலும் படிக்க | பெண்கள் ‘இந்த’ வகையான ஆண்களை நம்பவே கூடாது! கடைசியில் ஏமாத்திடுவாங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News