SBI Yono முக்கிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

புதிய பதிவு செய்யும்போது, வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட மொபைல் போனையே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 06:57 PM IST
  • நீங்கள் இந்திய ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான செய்தியாக இருக்கும்.
  • இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
  • ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்க எஸ்பிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
SBI Yono முக்கிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் title=

SBI Yono App News: நீங்கள் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான செய்தியாக இருக்கும். மொபைல் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பேங்கிங்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

இதன்படி, வாடிக்கையாளர்களின் எந்த மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த போனிலிருந்துதான் வாடிக்கையாளர்கள் யோனோ (SBI Yono) செயலியில் லாக் இன் செய்ய முடியும். அதாவது, நீங்கள் மற்ற மொபைல் எண்ணிலிருந்து யோனோ செயலியில் வங்கி சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்க எஸ்பிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

வங்கியே தகவல் கொடுத்தது

இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புதிய பதிவு செய்யும்போது, வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட மொபைல் போனையே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. அதாவது, கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எண்ணிலிருந்து லாக் இன் செய்தால், SBI Yono பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்காது.

சிம் பதிவு செயல்முறையை பூர்த்தி செய்யவும் 

வாடிக்கையாளர்கள் (SBI Customers) தங்கள் போனில் பதிவு செய்த மொபைல் எண்ணின் சிம்மை செயலியுடன் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ (SBI) யோனோ தெரிவித்துள்ளது. பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் சரிபார்ப்பு, ஒரு எஸ்எம்எஸ் மூலம் செய்யப்படும். இந்த எஸ்எம்எஸ் எஸ்பிஐயின் 7718965316 என்ற மொபைல் எண்ணிலிருந்து வரும்.

ALSO READ: மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!

முன்பு என்ன விதிகள் இருந்தன

முன்னதாக, YONO SBI வாடிக்கையாளர்கள் எந்த தொலைபேசியிலிருந்தும் லாக் இன் செய்யலாம். ஆனால், இப்போது புதிய மாற்றங்களின்படி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்கும் மொபைலில் இருந்து மட்டுமே நீங்கள் YONO செயலியில் ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பெற முடியும்.

வங்கி மோசடியிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை

அவ்வப்போது, ​​வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மோசடி பற்றி எஸ்பிஐ மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில், இணைய பாதுகாப்பு மற்றும் மோசடிகளை தவிர்க்க வங்கி 8 குறிப்புகளை பகிர்ந்து கொண்டது. YONO செயலியும் வங்கி மூலம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ALSO READ: SBI Life: செப்.30 வரை உங்கள் பாலிஸியை அபராதமின்றி புதுப்பிக்க அரிய வாய்ப்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News