18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுத்த 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்!

Nita Ambani Trainer Reveals Tips To Burn Belly Fat : இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சில வருடங்களுக்கு முன்பு வெயிட் லாஸ் செய்தார். அவருக்கு ட்ரெயினராக இருந்தவர், சில டிப்ஸ்களை கொடுக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2024, 02:28 PM IST
  • 18 கிலோ குறைந்த நீடா அம்பானி
  • அதற்கு உதவி செய்த அவரது ட்ரைனர்
  • அவர் கொடுக்கும் சில டிப்ஸ்..
18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுத்த 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்! title=

Nita Ambani Trainer Reveals Tips To Burn Belly Fat : இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மற்றும் தொழிலதிபர் குடும்பமாக இருக்கிறது அம்பானியின் குடும்பம். இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடைபெற்ற மிக பிரம்மாண்டமான திருமணம் இந்த குடும்பத்தில்தான் நடந்தது. சமீபத்தில் திருமணம் முடித்த நீடா அம்பானியின் மகன் ஆனந்த அம்பானி, 18 மாதங்களில் 108 கிலோ வரை குறைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல அவரது தாய் நீடா அம்பானியின் 18 கிலோ வரை குறைந்தாராம். இவர்களை வினோத் சன்னா என்னும் பிட்னெஸ் ட்ரைனர் ட்ரெயின் செய்து இருக்கிறார்.  சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் அவர் வெயிட்டை குறைக்க டிப்ஸ் கூறி இருக்கிறார். 

சீரான இடைவேளையில் சாப்பிடுங்கள்:

நாம் குறைவாக சாப்பிடுவதற்கு பதிலாக, சீரான இடைவெளி விட்டு சாப்பிடுவது நம்மை பயக்கும் என்கிறார், நீட அம்பானியின் ட்ரைனர். நேரம் எடுத்து சாப்பிடும் போது வயிறு உப்புசம் ஏற்படலாம். அதற்கு பதிலாக குறைவான உணவுகளை சீரான இடைவேளையில் சாப்பிடலாம். இது உங்கள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை வேலை செய்ய உதவும்.

டயட் இருப்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம் என்கிறார் இவர். உங்களுக்கு பிடித்த துரித உணவுகளை மொத்தமாக ஒதுக்க முடியவில்லை என்றாலும் அதனை ஹெல்தியாக எப்படி சாப்பிட வேண்டும் என தெரிந்து கொண்டு வைத்திருக்க வேண்டும் என்கிறார். அது மட்டுமின்றி, நாம் இந்த மாதிரியான புரதச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தும் வயிற்றில் உள்ள கொழுப்பு சீக்கிரமாக குறையும் என்கிறார்.

மேலும்  படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

Abs வொர்க் அவுட்: 

நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி Abs வொர்க் அவுட் செய்வது உண்டு. இது குறித்து பேசும் வினோத், அதற்கென்று இருக்கும் நேரத்தில் தான் அந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார். உடலில் உள்ள பெரிய தசைகளுக்கான (கால், முதுகு, மார்பு) உடற்பயிற்சிகளை செய்த பின்புதான், abs உடற்பயிற்சியை செய்ய வேண்டுமாம். இது ஏனென்றால் பெரிய தசைகளில் இருக்கும் கொழுப்பு குறைந்த பிறகு, சிறிய தசைகளில் இருக்கும் கொழுப்பு வேகமாக குறையுமாம். எனவே, அந்த உடற்பயிற்சிகளுக்கு பிறகு இதை செய்தால் சீக்கிரமாக உடலை மாற்றலாம்.

அனைத்து தசை வொர்க் அவுட்: 

நாம் வொர்க் அவுட் செய்யும்போது அனைத்து தசை குழுக்கள் வொர்க் அவுட் செய்ய வேண்டுமாம். தசைக்குழுக்கள் என இவர், மேல் வயிறு, அடி வயிறு, மலக்குடல் ஆகியவற்றை (Rectus abdominal, Internal oblique, External oblique and Transverse oblique) குறிப்பிடுகிறார். இந்த தசை குழுக்களுக்கான வொர்க் அவுட்-ஆக அவர் சில உடற்பயிற்சிகளையும் கூறுகிறார். Crunches செய்வதால் மேல் வயிறு மற்றும் தொப்பை பகுதிகளுக்கான உடற்பயிற்சியாக இருக்கும் என்று கூறுகிறார். மேலும், cross crunches மற்றும் leg raises ஆகியவற்றை சேர்த்து செய்தால் மலக்குடல் வர்க்-அவுட். இதே போல plank மற்றும் side plank-ம் செய்யவேண்டும் என்கிறார். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News