அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கி வந்த விலை குறைவான சூப்பரான ப்ராட்பேண்டு திட்டங்களை நீக்கியுள்ளது. பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.275 திட்டத்துடன் சேர்த்து ரூ.775 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது, இந்த திட்டங்களுக்கு இடையேயான ஒற்றுமை என்னவென்றால் இரண்டு ப்ராட்பேண்டு திட்டங்களும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டங்களில் இறுதி தேதியை தனது வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது, இதனால் நிறுவனம் இவற்றை நீக்குவதாக கூறப்படுகிறது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் நீக்குவதாக கூறப்படும் திட்டங்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | 2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா
பிஎஸ்என்எல் ரூ.275 திட்டம்:
ரூ.275 விலையில் நிறுவனம் இரண்டு திட்டங்களை வழங்குகிறது, இந்த இரண்டு திட்டங்களும் 3.3டிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ரூ.275ன் ஒரு திட்டம் 30 எம்பிபிஎஸ் வேகத்திலும் மற்றொன்று 60 எம்பிபிஎஸ் வேகத்திலும் கிடைக்கிறது. இரண்டு திட்டங்களும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருவதோடு, பயனர்களுக்கு ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. அதிக பணத்தை செலவு செய்யாமல் பல சலுகைகளை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வு.
பிஎஸ்என்எல் ரூ.775 திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.775 திட்டமானது 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 3.3டிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருவதோடு, பயனர்களுக்கு ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் படிக்க | ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ