இந்த ஆண்டில் பிஎப் அக்கவுண்டில் வரும் மிகப்பெரிய மாற்றம் - குட்நியூஸ்..!

EPFO | பிஎப் மற்றும் ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகளில் இந்த ஆண்டில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரபோவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2025, 09:09 PM IST
  • பிஎப் பணம் எடுக்கும் விதிமுறைகள்
  • இந்த ஆண்டில் வரப்போகும் பெரிய மாற்றம்
  • ஏடிஎம் வழியாகவே பிஎப் பணம் எடுக்கலாம்
இந்த ஆண்டில் பிஎப் அக்கவுண்டில் வரும் மிகப்பெரிய மாற்றம் - குட்நியூஸ்..! title=

EPFO Latest Update | வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளது. மத்திய அரசின் தகவலின்படி, புதிய PF முறை ஜூன் 2025 க்குள் செயல்படுத்தப்படும். புதிய அமைப்பின் கீழ், ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும். இதனால் ATM-ல் வழியாக PF பணத்தை எடுக்கும் வசதி இருக்கும். EPFO-வின் புதிய சாப்ட்வேர் அமைப்பான EPFO ​​3.0 இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்த புதிய முறை ஊழியர்களுக்கு வசதியான மற்றும் யூசர் பிரண்ட்லி அனுபவத்தை வழங்கும்.

EPFO ATM அட்டை சேவை

EPFO 3.0 இன் கீழ், அனைத்து உறுப்பினர்களுக்கும் ATM அட்டைகள் வழங்கப்படும். இந்த அட்டை மூலம், ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் தொகையை எளிதாக எடுக்கவும் நிர்வகிக்கவும் முடியும். குறிப்பாக நிதி அவசர காலங்களில் இந்த சேவை உதவும். மத்திய அமைச்சர் மாண்டவியாவின் கூற்றுப்படி, வெப்சைட் மற்றும் அதன் அமைப்பில் ஆரம்ப அப்டேட்டுகள் இந்த மாதத்திற்குள் நிறைவடையும். இதன் பின்னர், EPFO ​​3.0 படிப்படியாக செயல்படுத்தப்படும்.

PF திரும்பப் பெறும் சேவை

EPFO உறுப்பினர்கள் 2025 முதல் ATM மூலம் நேரடியாக தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். இந்த செயல்பாட்டில் குறைந்தபட்சம் அதிகாரி ஒப்புதல் இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி இருக்கும். அதாவது, எந்த அதிகாரியின் அனுமதியும் இல்லாமல் PF லிருந்து பணம் எடுக்கலாம். இந்த புதிய அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரே கிளிக்கில் தீர்த்துக் கொள்ளலாம்.

புதிய மொபைல் செயலி எப்போது வரும்?

EPFO 3.0 இன் கீழ் புதிய மொபைல் செயலி மற்றும் பிற டிஜிட்டல் சேவைகளும் தொடங்கப்படும். புதிய செயலி, ஏடிஎம் கார்டு மற்றும் அப்டேட் சாப்ட்வேர் ஆகியவை ஜூன் 2025 க்குள் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் மண்டவியா தெரிவித்தார். இது தவிர, தொழிலாளர் அமைச்சகம் கட்டாய பங்களிப்பு வரம்பான 12% ஐ நீக்க திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் சேமிப்பின் படி பிஎஃப்-க்கு பங்களிக்க விருப்பம் வழங்கப்படலாம். மேலும், இந்த தொகையை ஊழியரின் ஒப்புதலுடன் ஓய்வூதியமாக மாற்றுவதற்கான திட்டம் உள்ளது.

ஈபிஎஃப்ஓ 3.0 -ன் நோக்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை எளிமையாகவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவதே ஈபிஎஃப்ஓ 3.0 -ன் நோக்கம். இந்த முயற்சி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊழியர்களின் நிதி நிர்வாகத்தையும் மேம்படுத்தும். ஈபிஎஃப்ஓவின் இந்தப் புதிய முயற்சி கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பாதுகாப்பான பிஎஃப் மேலாண்மைக்கான விருப்பத்தை வழங்கும். இந்த சேவை இப்போது கிடைக்காது. விரைவில் நடைமுறைக்கு வரும்.

மேலும் படிக்க | EPFO விதிகளில் முக்கிய மாற்றம்: பணம் எடுப்பது முதல் கணக்கில் திருத்தம் வரை, முழு விவரம் இதோ

மேலும் படிக்க | Budget 2025: வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் இரண்டு நல்ல செய்திகள், விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News