8வது ஊதியக்குழு: இனி அரசு ஊழியர்களுக்கு குஷி தான்... கிராஜுவிட்டி இத்தனை லட்சம் வரை உயரும்!

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் கிராஜுவிட்டி எவ்வளவு உயரும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

2026ஆம் ஆண்டு முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியக்காரர்களுக்கு நேரடியாக பயனடைவார்கள்.

1 /8

8வது ஊதியக்குழுவுக்கு (8th Pay Commission) மத்திய அமைச்சரவை கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் ஆகியோரின் மாதச் சம்பளம், கொடுப்பனவுகள், கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும்.

2 /8

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மொத்தம் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் 65 லட்சம் ஓய்வூதியக்காரர்களுக்கு (Pensioners) நேரடியாக பயனடைவார்கள். 

3 /8

குறிப்பாக, அரசின் பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம் வீதம் (Inflation Rate) உள்ளிட்டவையின் அடிப்படையில் 8வது ஊதியக்குழு சம்பளம் மற்றும் ஓய்வூதியக்குழு அமையும். தற்போதைய 7வது ஊதியக்குழு 2026ஆம் ஆண்டு நிறைவடையும்.

4 /8

அதேபோன்று, 8வது ஊதியக்குழுவில் கிராஜுவிட்டியின் (Gratuity) அதிகபட்ச அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ் கிராஜுவிட்டி உச்சபட்சமாக ரூ.20 லட்சம் ஆக இருக்கிறது.   

5 /8

இதனால், 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கிராஜுவிட்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

6 /8

அதாவது, கடைசிய அடிப்படை சம்பளத் தொகை (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் அடிப்படையில்தான் கிராஜுவிட்டி நிர்ணயம் செய்யப்படும். உதாரணத்திற்கு, உங்களின் மாத அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரமாக இருந்து, 30 வருடம் பணி அனுபவம் என்றால் உங்களுக்கு கிராஜுவிட்டி ரூ.4.89 லட்சமாக வரும்.  

7 /8

ஆனால், 8வது ஊதியக்குழுவின் புதிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) 2.57இல் இருந்து 2.86 ஆக அதிகரித்துள்ளது. இதன்கீழ், கிராஜுவிட்டி ரூ.12.56 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

8 /8

8வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் 25% முதல் 35% வரை அதிகரிக்கலாம். அதேபோல் மற்ற அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணம் சார்ந்த கொடுப்பனவு ஆகியவையும் அதிகரிக்கும். ஓய்வூதியம் கூட 30% வரை அதிகரிக்கலாம்.