Rohit Sharma | ரஞ்சி டிராபி போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி மாபெரும் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. 42 முறை ரஞ்சிக் கோப்பையை வென்று சரித்திர சாதனையை படைத்திருக்கும் மும்பை அணியை இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தியிருக்கிறது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் இரண்டு முறை மோதியிருக்கின்றன. இந்த 2 போட்டிகளிலும் ஜம்மு காஷ்மீர் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் மும்பை அணியில் இந்திய அணிக்காக ஆடிய மற்றும் ஆடிக் கொண்டிருக்கும் ஆறு சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் அணியில் ஒரே ஒரு சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் கூட இல்லை. மும்பை அணியின் தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங்கும் முக்கிய காரணம்
மும்பை ஜம்மு காஷ்மீர் போட்டி
மும்பை - ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை போட்டி சரத்பவார் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 205 ரன்களை மும்பை அணி ஜம்மு காஷ்மீர் அணிக்கு நிர்ணயித்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, ஷர்துல் தாக்கூர் என மினி இந்திய அணியே மும்பை அணியாக விளையாடியது. இதனால் மும்பை அணியே இப்போட்டியில் எளிதாக வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதற்கு மாறாக ஜம்மு காஷ்மீர் அணியின் பேட்டிங்கும் பவுலிங்கும் இருந்தது. முடிவில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை ஜம்மு அணி வீழ்த்தியது.
மும்பை அணிக்கு அவமானம்
மும்பை அணி இப்படியொரு அவமானமான தோல்வியை இதுவரை சந்தித்தது இல்லை. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால், முன்னாள் பிளேயர் அஜிங்கியா ரஹானே, ஷர்துல், ஸ்ரேயாஸ் என எல்லோரும் சர்வதேச பிளேயர்கள் என்பதால் இப்போட்டியில் மும்பை அணியின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எல்லோரும் சொதப்பியதால் மும்பை அணி மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் 3, 28 என்ற சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதுவே மும்பை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் ரோகித் சர்மாவை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டுமா? என்ற கேள்விகள் பலமாக எழுந்துள்ளன.
மேலும் படிக்க | ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்..! அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் மோசமாக அவுட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ