ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

High blood pressure | உயர் இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது? உயர் இரத்த அழுத்தம் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 25, 2025, 06:26 PM IST
  • உயர் ரத்த அழுத்தம் எச்சரிக்கைகள்
  • இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாது
  • பிபி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? title=

High blood pressure Control Diet Tips | உயர் ரத்த அழுத்தம் என்பது சைலண்ட் கில்லர். இந்த பிரச்சனை வருவதற்கு இன்றைய காலகட்டத்தில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் மாறியதே காரணம். ரத்த அழுத்த பிரச்சனை பொதுவாக இரண்டு வகை உண்டு. உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம். இந்த பிரச்சனை இருக்கும் நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரக நோய்களும் வந்துவிடும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, நீங்கள் மருத்துவரை கட்டாயம் நாட வேண்டும்.

அதேநேரத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றுவதன் வழியாகவும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன சாப்பிடக்கூடாது?

பதப்படுத்தப்பட்ட உணவு

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உப்பை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். சந்தையில் கிடைக்கும் சிப்ஸ், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் போன்ற அதிக உப்பு உணவுகளை உட்கொள்வது இந்தப் பிரச்சனையை அதிகரிக்கும். கடைகளில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களில் அதிக சோடியம் இருப்பதால், அது உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையை அதிகரிக்கும். இதனுடன், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்களையும் குடிக்கக்கூடாது.

அதிகப்படியான உப்பு

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அதிகப்படியான உப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிகப்படியான உப்பு உட்கொள்வது ஆபத்தானது. உப்பில் அதிக அளவு சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை சீக்கிரம் அதிகரிக்க முக்கிய காரணமாகிறது. எனவே, இந்த நோயாளிகள் குறைந்த அளவில் உப்பை உட்கொள்ளவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அதிக இனிப்புகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இனிப்புகள் காரணமாக சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக எடை அதிகரித்து இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படும். இது மிகப்பெரிய பின்விளைவுகளுக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.

டீ, காபி

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக அளவு காஃபின் உட்கொள்வது ஆபத்தை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம். காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?

பழங்கள், காய்கறிகள்

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் உணவில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, தர்பூசணி, வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், கீரை, ப்ரோக்கோலி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகளில் தாதுக்கள் காணப்படுகின்றன, அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

முழு தானியங்கள்

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு முழு தானியங்களை உட்கொள்வதும் சிறந்தது. உணவில் ஓட்ஸ், பழுப்பு அரிசி, பயறு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு மற்றும் முழு தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்பு

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டும். வால்நட்ஸ், பாதாம், ஆளி விதைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | தாய்ப்பால் சுரக்க இந்த உணவை சாப்பிடுங்க..குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறையக் கிடைக்கும்!

மேலும் படிக்க | வேலையே செய்யலனாலும் ஓவரா வியர்வை வருதா..அப்போ உங்கள் உடலுக்கு இந்த பிரச்சனை வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News