Happy Republic Day 2025: நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று குடியரசு தின வாழ்த்து சொல்லலாம் வாங்க!!

Republic Day 2025: இன்று (ஜன. 26) குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ள நிலையில், இந்த நேரத்தில் நாம் நமது சுதந்திரம், ஒற்றுமை, எதிர்காலத்திற்கான முன்னேற்றப் பாதை ஆகியவை பற்றியும் சிந்திக்க வேண்டும். குடியரசு தின விழாவை இன்னும் சிறப்பாக்க, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்துகள்ள சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 26, 2025, 06:01 AM IST
  • இன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ளது.
  • உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா?
  • சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.
Happy Republic Day 2025: நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று குடியரசு தின வாழ்த்து சொல்லலாம் வாங்க!! title=

Republic Day 2025: நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜன. 26) கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் குடியரசு தின நாளாக கொண்டாடப்படுகின்றது. 1947 ஆகஸ்ட் 15 அன்று, நம் நாடு ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. ஆனால் அந்த நேரத்தில் நமது நாட்டிற்கு அதன் சொந்த அரசியலமைப்பு இல்லை. 1950 ஜனவரி 26 அன்று அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு நாட்டிற்கு ஒரு புதிய திசையை அளித்தது. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது அரசியலமைப்பின் வரைவை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. பின்னர் இது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.

குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ள நிலையில், இந்த நேரத்தில் நாம் நமது சுதந்திரம், ஒற்றுமை, எதிர்காலத்திற்கான முன்னேற்றப் பாதை ஆகியவை பற்றியும் சிந்திக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியான, சிறப்பான நன்னாளில், நாம் நமது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கும் நமது குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவோம். குடியரசு தின விழாவை இன்னும் சிறப்பாக்க, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்துகள்ள சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.

குடியரசு தின வாழ்த்து செய்திகள்:

- நாட்டுப்பற்று மிக்க நல்லுள்ளம் கொண்ட உங்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! 

- இந்திய தாயின் புதல்வர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! 
 
- உங்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! 

- உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

- ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் தேசபக்தியின் உணர்வு எங்கும் பரவட்டும். நாட்டுப்பற்றால் இதயங்களையும் வீடுகளும் நிறையட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் இலட்சியங்களை எப்போதும் மதிப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- இந்த சிறப்பு நாளில், இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றி நிலைக்க குடும்பமாய் உங்களை வாழ்த்துகிறோம்.

- இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- நமது கொடியின் வண்ணங்கள் எப்போதும் நமது கடமையையும் தேசத்தின் மீதான அன்பையும் நினைவூட்டட்டும். உங்களுக்கு மகிழ்ச்சியான குடியரசு தின வாழ்த்துக்கள்!

- மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் வலிமை, இரத்தத்தில் தூய்மை, ஆன்மாவில் பெருமை கொள்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- நமது நாட்டின் பொன்னான பாரம்பரியத்தை நினைவில் வைத்துக் கொண்டு, நமது தேசத்திற்கு வணக்கம் செலுத்துவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- இந்த நன்னாளில், நமது நாட்டிற்காகப் போராடிய நமது துணிச்சலான சுதந்திரப் போராளிகளை நினைவு கூர்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- இந்த நன்னாளில், அரசியல் அமைப்பை ஆழமாய் வடிவமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான வரைபடத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு மனமார நன்றி கூறுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- இந்த குடியரசு தினம் அனைவருக்கும் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- சமத்துவமும் சகோதரத்துவமும் மேம்படட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- அனைவருக்கும் 76வது, குடியரசு தின வாழ்த்துகள். நாட்டின் அமைதி நிலவட்டும், முன்னேற்றம் ஏற்படட்டும்.

- நாட்டை காப்பவர்களை நினைவு கூர்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

- இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். உலகுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க | குடியரசு தின விழாவில் பேசப்போகிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ

மேலும் படிக்க | குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியாவில் 'ஜனவரி 26' குடியரசு நாள் ஆனது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News