6 மாதத்தில் வாழ்க்கையே மாறும்! ‘இந்த’ 6 பழக்கங்களை பின்பற்றினால் போதும்..

6 Habits That Will Change Your Life In 6 Months : நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நாம் 6 தினசரி நடவடிக்கைகளை வாழ்வில் சேர்த்துக்கொண்டால் போதுமானது. அவை என்னென்ன தெரியுமா?

6 Habits That Will Change Your Life In 6 Months : 48 நாட்கள் ஒரு விஷயத்தை செய்தால் அந்த விஷயம் அப்படியே பழக்கமாக மாறி விடும் என சிலர் கூறுவார்கள். அப்படியிருக்கையில் நாம் 6 மாதத்திற்கு ஒரு விஷயத்தை செய்தால், அது நமது வாழ்க்கையை மேம்படுத்தாதா என்ன? அப்படி, நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

1 /7

புத்தாண்டு இப்போதுதான் தொடங்கியது போல உள்ளது. ஆனால், விரைவில் இந்த ஜனவரி மாதமே முடிவடைய போகிறது. இந்த ஆண்டில் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலரும், அதை கிட்டத்தட்ட கை விட்டிருப்பர். ஆனால், சில சிம்பிளான பழக்கங்களை 6 மாதம் பின் தொடந்தாலே போதும். நம் வாழ்வே மாறிவிடும். அப்படிப்பட்ட சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

2 /7

உங்கள் உறக்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். தினமும் இரவில் 7-9 மணி நேரம் உறங்க முயற்சி செய்ய வேண்டும். உறங்கும் நேரத்தில் செல்போனை தள்ளி வைத்து விட்டு உறங்க வேண்டும். நன்றாக உறங்கினால்தான், உங்களால் அந்த நாளிலும் விழிப்புடன் செயல்பட முடியும்.

3 /7

தினம் தோறும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் உங்களால் வளர்ச்சி பெற முடியும்.

4 /7

காலை அல்லது மாலையில் 30 நிமிடம் உங்கள் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்யலாம். இதனால் உடல் வலுவாகி, எண்ண ஓட்டங்களும் மேம்படும். 

5 /7

அமைதியில் நிம்மதியை தேடுங்கள். தினமும் 10 நிமிடம், அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைக்கவும், உணர்ச்சி ரீதியாக உங்களை மேம்படுத்தவும் உதவும்.

6 /7

எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும், எதற்கெல்லாம் செலவு செய்ய கூடாது என பட்ஜெட் போட வேண்டும். இது, உங்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு நிதி மேலான்மை தொடர்பான ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும்.

7 /7

உங்களது நாளில், நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை திட்டமிட வேண்டும். சரியான இலக்குகளை நிர்ணயித்து அதன்படி நடக்க வேண்டும். இப்படி 6 மாதங்கள் செய்தால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட உங்கள் வாழ்க்கை இன்னும் அதிகளவில் மேம்பட்டு இருக்கும்.