Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை, 75வது குடியரசு தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாட இருக்கிறோம். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்:
குடியரசு தினத்தையொட்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அதற்குரிய கொண்டாட்டங்களுக்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் அணிவகுப்பு, பிரதமர் நரேந்திர மோடி பேச்சு, வெளிநாட்டு விருந்தினர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்தோனேசியாவின் குடியரசு தலிஅவர் ப்ரபோவோ சுபைண்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்திய போர் நினைவு சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்த பின்னர், அணிவகுப்புகள் நாளை தொடங்க இருக்கிறது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக்கொள்வார்.
குடியரசு தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாளை எந்தெந்த நிறுவனங்கள் திறந்திருக்கும், எவையெல்லாம் மூடியிருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
நாளை எந்த நிறுவனங்கள் எல்லாம் மூடி இருக்கும்?
>அரசு நிறுவனங்கள், வங்கிகள், தேசிய மருத்துவ மையம், UPSC கட்டடங்கள் உள்ளிட்டவை நாளை மூடியிருக்கும்.
>சாஸ்திரி பவன், தலைமை செயலகம் உள்ளிட்டவை நாளை மூடி இருக்கும்.
>தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என அனைத்தும் நாளை மூடியிருக்கும்.
>பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை மூடியிருக்கும்.
>வணிக நிறுவனங்கள் நாளை மூடியிருக்கும்.
எவையெல்லாம் செயல்படும்?
>பொது போக்கு வரத்துகளான பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்டவை நாளை தடையின்றி செயல்படும். ஆனால், அவை குறைவான அளவில் இருக்கும்.
>ஷாப்பிங் மால்கள், உணவு சாப்பிடும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை நாளை செயல்படலாம். ஆனால், மாலை சீக்கிரமாகவே மூடப்பட்டு விடும்.
>டிஜிட்டல் பேங்கிங், நெட் பேங்கிங் உள்ளிட்டவை செயல்படும்.
>ஏடிஎம் இயந்திரங்கள் 24*7 செயல்பட்டு கொண்டிருக்கும்
>தனியார் ஊடகங்களும், அரசு ஊடகங்களும் செயல்படும்.
>தனியார் கிளின்க்குகள், மருத்துவமனைகள் நாளை செயல்படலாம்.
மேலும் படிக்க | குடியரசு தின விழாவில் பேசப்போகிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ
மேலும் படிக்க | குடியரசு தின விழா: இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ