பாகுபலியை விட படா ப்ராஜெக்டா இருக்குமா? ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த வீடியோ..

SS Rajamouli Video About SSMB29 Movie : பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமெளலி, தனது அடுத்த படம் குறித்த ஹிண்டை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 25, 2025, 05:39 PM IST
  • மகேஷ் பாபுவின் SSMB29 படம்!
  • ராஜமௌலி கொடுத்த ஹிண்ட்..
  • வைரலாகும் வீடியோ..
பாகுபலியை விட படா ப்ராஜெக்டா இருக்குமா? ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த வீடியோ.. title=

SS Rajamouli Video About SSMB29 Movie : நான் ஈ, பாகுபலி, RRR உள்ளிட்ட படங்கள் மூலம் உலக அளவில் பல மேடைகளை ஏறிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ஷங்கரை அனைவரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று கூறிவந்த காலத்தில் அவரையே தனக்கு முன்னுதாரணமாக வைத்து அவரை விட பெரிய பெரிய படங்களை கொடுத்து வசூலையும் பள்ளியை குளிராக இருக்கிறார் ராஜமௌலி. இவரது அடுத்த படம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

SSMB29:

தமிழில் எப்படி விஜய்யோ அதேபோல தெலுங்கு சினிமா மற்றும் தமிழக மக்களால் ரசிக்கப்படுபவர் மகேஷ் பாபு. இளமையான துள்ளலுடன் இவர் நடித்திருக்கும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இவர் ராஜமௌலி உடன் சேர்ந்து SSMB படத்தில் பணி புரிய இருக்கிறார். குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ராஜமௌலி தொடர்ந்து இதுகுறித்து க்ளு கொடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

ராஜமௌலி வெளியிட்ட வீடியோ:

இயக்குனர் ராஜமவுலி தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், அவர் ஒரு சிங்கத்தின் படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் கேமராவை பார்த்து சிரித்து விட்டு பாஸ்போர்டை காண்பிப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

இதனால் மகேஷ்பாபு உடன் இவர் சேர்ந்து நடிக்கும் படத்தின் வேலைக்காக இவர் வெளிநாடு சென்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மகேஷ்பாபு, “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்..” என்று விஜய் டைலாக்கை கமெண்ட் செய்திருக்கிறார். மகேஷ்பாபு இப்போது வெளிநாட்டின் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவரை சந்திக்க ராஜமௌலி சென்றிருக்கலாம் ரசிகர்கள் கணித்துள்ளனர்.

நாயகி யார்?

ராஜமௌலி-மகேஷ் பாபு இணையும் இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரிடம் கதை கூறி அவர் ஓகே சொல்லி விட்டதாகவும், பட வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ராவிற்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததை எடுத்து அவருக்கு தென்னிந்திய திரை உலகம் திறந்த கரங்களுடன் பல வாய்ப்புகளை கொடுக்கும் எனகூறப்படுகிறது.

Mahesh Babu Priyanka Chopra

இந்த படத்தில் நடிப்பதற்காக மகேஷ் பாபுவுக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்கப்படுவதாகவும், இது ஹைதராபாத்தில் நடப்பதாவும் கூறப்படுகிறது. இங்கு, லுக் டெஸ்ட் மற்றும் ஸ்கிரிப்ட் ரீடிங் ஆகியவையும் நடைபெற இருக்கிறதாம். இதில், நடிக்க பிரியங்காவை சம்மதிக்க வைக்க மட்டும் 6 மாத காலம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

பாகுபலியை விட பெருசா இருக்குமாே?

ராஜமெளலியின் பாகுபலி படம், பல இந்திய சினிமா படங்களுக்கு மைல்கல்லாக அமைந்து பாேனது. இந்த நிலையில், தற்போது உருவாகி வரும் SSMB29 படம், அதை விட பெரிய ப்ராஜெக்டாக இருக்குமோ எனக்கூறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே

மேலும் படிக்க | தனுஷின் இந்த படத்தை மிஸ் பண்ணாதிங்க... சர்வதேச ஊடகத்தில் ராஜமௌலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News