ஜப்பானியர்களின் பழக்கவழக்கங்கள் தான் உலகிலேயே நீண்ட ஆயுளுக்கு, இளமை தோற்றத்துக்கும் பெயர்பெற்ற வாழ்க்கை முறை. அவர்கள் தங்களின் வாழ்க்கை முறையையே ஆரோக்கியமாக வைத்திருப்பதால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்கின்றனர். அதனால், அவர்கள் எப்படியான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை பார்க்கலாம். அவர்களின் இந்த ஏழு பழக்க வழக்கங்களை நீங்களும் பின்பற்றுங்கள்.
1. உணவு முறை
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மிகமிக குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஜப்பானியர்களின் உணவுமுறையில் இந்தவகை உணவுகளுக்கு இடம் மிகமிக குறைவு. செயற்கை சர்க்கரை உணவுகளுக்கும் இடமில்லை. புதிய காய்கறிகள், கடல் உணவுகள், சோயா மற்றும் அரிசி ஆகியவை பிரதானமாக இடம்பெறுகின்றன.
மேலும் படிக்க | தினமும் இவ்வளவு நேரம் நடந்தால் போதும்! கிடைக்கும் அற்புத நன்மைகள்!
2. கிரீன் டீ
இங்கு எல்லோரும் டீ குடிப்பதுபோல ஜப்பானியர்களும் டீ குடிப்பார்கள். ஆனால் அவர்கள் பச்சை தேயிலையால் தயாரிக்கப்பட்ட டீயை எடுத்துக் கொள்கிறார்கள். ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ள இந்த டீ, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
3. திருப்தி அடையும் வரை சாப்பிடுவது
உணவை எப்போதும் திருப்தி அடையும் வரை சாப்பிடுவார்கள். அதாவது அதிகமாக உணவு சாப்பிடுவது வேறு, திருப்தி அடையும் வரை சாப்பிடுவது என்பது வேறு, பல வகையான உணவுகளை சீராக எடுத்துக் கொள்ளும்போது, வெகு சீக்கிரமே நீங்கள் திருப்தி நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
4. உடற்பயிற்சி
ஜப்பானியர்கள் உடற்பயிற்சியை எப்போதும் கைவிடுவதில்லை. தினசரி உடற்பயிற்சிக்கு என்று தனியாக நேரம் ஒதுக்குகிறார்கள். வாக்கிங், சைக்கிளிங், தற்காப்பு கலை என ஏதாவது ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
5. தோல் பராமரிப்பு
தோல் பராமரிப்புக்கும் ஜப்பானியர்கள் கூடுதல் கவனத்தை செலுத்துகிறார்கள். சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு, நாள் முழுவதும் அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருத்தல் ஆகியவற்றை பின்பற்றும் அவர்கள் தோல் பராமரிப்புக்காக கடற்பாசி, பச்சை தேயிலை மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பேஸ்டை உபயோகிக்கிறார்கள்.
6. மன அழுத்தம்
மன அழுத்தத்துக்கு எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். உங்களை மன அழுத்தங்களில் இருந்து முழுமையாக விலக்கி வைத்துக் கொண்டாலே எப்போதும் இளமையாக இருக்கலாம். இயற்கையோடு நேரத்தை செலவிட வேண்டும். காடுகளுக்குள் பயணித்தல் மிக முக்கிய அம்சமாகும்.
7. உறவுகள்
நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நேர்மறையான வழியில் பயணிக்கவும் மனம் திறந்த உரையாடல் என்பது அவசியம். அதனை உறவினர்களோடும், குடும்பத்தினரோடும் செய்யும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க | அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ