பும்ரா மட்டும் இல்லை! இந்த வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார்கள்!

2025 Champions Trophy: காயம் காரணமாக ஒவ்வொரு அணியில் இருந்தும் சில முக்கிய வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளனர். இது அந்த அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2025, 06:16 AM IST
  • 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்.
  • பும்ரா காயம் காரணமாக விலகல்.
  • ஹர்ஷித் ராணா அணியில் சேர்ப்பு.
பும்ரா மட்டும் இல்லை! இந்த வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார்கள்! title=

2025 Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு தற்போது முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும் பும்ராவிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் இடம் பெறவில்லை. பும்ராவிற்கு பதில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் 23 வயதான ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?

பும்ரா காயம்

"வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுகிறார். பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடுவார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் விளையாடுவார்" என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்படும் போதே பும்ரா ஐந்து வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்கள் அடிக்க விட்டாலும் இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்ஷித் ராணா.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அவரது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வருண் ஐந்து ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். தற்போது அணியில் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக விளையாடி வருவதால் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. கூடுதல் வீரர்களாக ஜெய்ஸ்வால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காயத்தால் விலகும் சீனியர் வீரர்கள்

பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)

கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகி உள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்று கொடுத்த கம்மின்ஸ் இல்லாதது அவர்களுக்கு பெரிய இழப்பு. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டும் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் இருவரும் வெளியேறியதால் பந்துவீச்சில் தற்போது தடுமாறி உள்ளது ஆஸ்திரேலியா.

லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து)

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்திய முத்தரப்பு தொடரில் காயம் ஏற்பட்ட ரச்சின் ரவீந்திராவும் விளையாடுவது சந்தேகம்.

ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்ரிச் நார்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஜெரால்ட் கோட்ஸி காயத்தால் ஐசிசி தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து)

பிப்ரவரி 6 அன்று நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News