தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக ரஜினி மற்றும் விஜய் இருந்து வருகின்றனர். இருவரின் படங்களுக்கும் அதிகளவு வசூல் எப்போதும் இருக்கும். சமீப காலமாக ரஜினி படங்களை தாண்டி விஜய் படங்கள் அதிக வசூல் செய்து வருகின்றன, மேலும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அடிக்கடி சண்டைகள் வரும். இருவருக்கும் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் சமூக ஊடகங்களில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்து வருகின்றது.
விஜய்யை பற்றி அவதூறு கருத்துகளை ரஜினி ரசிகர்களும், ரஜினியை பற்றிய அவதூறு கதையில் விஜய் ரசிகர்களும் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது. ட்விட்டர் ஸ்பேஸ்ல் சிலர் ரஜினி ரசிகர்கள் விஜய் பொதுமக்களை சந்திக்க வரும்போது அழுகிய முட்டைகளை அவர் மீது அடிப்போம் என்று பேசி உள்ளனர். இது மிகப்பெரிய விவாதமாக மாறி உள்ளது. இந்த சம்பவம் இரு தரப்பு ரசிகர்கள் இடையே பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய்க்கு ஆதரவாக பேசிய ரஜினி
இந்நிலையில் இந்த ஆடியோ சம்பந்தமாக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ரஜினி தரப்பில் இருந்தும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரோதத்திற்கு பதிலாக மரியாதை, நேர்மறை மற்றும் நல்லிணக்கத்தை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. "இது போன்ற கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் உண்மையான ரஜினிகாந்த ரசிகர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். மேலும் இது போன்ற ஆடியோக்களை மீண்டும் மீண்டும் பகிர்வது பகைமையை வழி வகுக்கும். எனவே ஊடகங்கள் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்க தான் சினிமா தவிர சண்டையை ஏற்படுத்துவதற்கு இல்லை. இப்படி பேசியதற்கு கடும் கண்டனங்கள்" என்று ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர அரசியலில் விஜய்
2026 தேர்தலுக்கான வேலையில் விஜய் தற்போது இருந்து தீவிரமாக இறங்கி வருகிறார். சமீபத்தில் மாவட்ட செயலாளர் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் வியூகங்களுக்காக பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பு பல திட்டங்களை விஜய் வைத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் படிக்க | காதலர் தினத்தில் ரோஜாவின் சிறப்பு என்ன தெரியுமா? பல வண்ண ரோஜாவின் ரகசியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ