SIP Mutual Fund: 45 வயதில் கோடீஸ்வரன் ஆக உதவும்... 15x15x15 முதலீட்டு ஃபார்முலா

SIP Mutual Fund Investment Tips: கோடிகளில் பணம் ஈட்ட, உங்கள் வயது ஒரு பொருட்டல்ல.  20, 25, 30, அல்லது 35 என எந்த வயதாக இருந்தாலும் சரி, ஒரு எளிய முதலீட்டுத் திட்டம் உங்களை கோடீஸ்வரராக ஆக்க உதவும். 

பரஸ்பர நிதியத்தில் SIP உத்தி மூலம் முதலீடு செய்து, உங்கள் பணத்தை ரூ. 1 கோடியாக எவ்வாறு பெருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். கோடீஸ்வரர் இலக்கை அடைய 30 வயதான இளைஞர் தனது, 45வது வயதில் கோடீஸ்வரர் ஆகி விடலாம். இதற்கு 15x15x15 ஃபார்முலா உதவும்.

1 /10

SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது ஒரு நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். ரூ. 500 என்ற சிறிய தொகையுடன் கூட SIP உத்தியின் முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால், இது சாமான்யர்களுக்கான  சிறந்த திட்டமாக உள்ளது.

2 /10

கூட்டு வட்டியின் பலன்: SIP முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிமையானது மட்டுமல்ல, அபரிமிதமான வருமானத்தையும் அள்ளித் தருகிறது. இதற்குப் பின்னால் வருமானத்தை பன்மடங்காக பெருக்கும் ஆற்றல் இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், இதில் கூட்டு வட்டியின் பலனுடன் கிடைக்கும் ரிட்டர்ன்ஸ்.

3 /10

15X15X15 என்னும் SIP சூத்திரம்: இதில் உள்ள மூன்று 15 எண்களும் முக்கியமானவை. முதல் 15 நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 15,000 முதலீடு செய்ய வேண்டிய முதலீட்டுத் தொகையைக் குறிக்கிறது. இரண்டாவது 15 என்பது 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதைக் குறிக்கிறது. மூன்றாவது 15 என்பது சராசரி வருடாந்திர வருமானத்தைக் குறிக்கிறது. இது 15 சதவீதம்.

4 /10

மாதம்தோறும் ரூ.15,000 முதலீடு: 15X15X15 SIP ஃபார்முலாவின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு 15 சதவீத சரசரி வருடாந்திர வருமானத்தை அளிக்கும் பரஸ்பர நிதியங்களில்,  முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம்தோறும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.

5 /10

ஒரு கோடி நிதி இலக்கு: உங்களது 20 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 35 வயதிற்குள், உங்களிடம் ரூ.1 கோடி கார்பஸ் இருக்கும். உங்களது  25 வயதில் தொடங்கினாலும், 40 வயதாகும் போது 15x15x15 ஃபார்முலாவைப் பயன்படுத்தி ஒரு கோடி என்ற உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.

6 /10

45 வயதிற்குள் ரூ.1 கோடி கார்பஸ்:  இளம் வயதிலேயே ரூ.15,000  முதலீட்டை ரூ.1 கோடியாக மாற்றுவது எளிது. உதாரணத்திற்கு அதாவது 30 வயதில் முதலீட்டை தொடங்கினால், உங்களுக்கு 45 வயதிற்குள், ரூ.1 கோடி கார்பஸ் இலக்கை அடையலாம். இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, 35 வயதில் முதலீடு செய்தால், 50 வயதில் தான் இந்த கார்பஸ் இலக்கை அடைய முடியும்.  

7 /10

மொத்த முதலீட்டுத் தொகை: இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP முதலீட்டைத் தொடங்கி 15 ஆண்டுகள் தொடர்ந்தால், உங்கள் மதிப்பிடப்பட்ட முதலீட்டுத் தொகை ரூ.27,00,000 ஆக இருக்கும்.

8 /10

மூலதன ஆதாயங்கள்: இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP முதலீட்டை 15 ஆண்டுகள் தொடர்ந்தால், உங்கள் மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.74,52,946 ஆக இருக்கும்.

9 /10

ஓய்வூதிய கார்பஸ்: 15X15X15 SIP ஃபார்முலா சூத்திரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP முதலீட்டை, தவறாமல் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், உங்கள் ஓய்வு காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.1,01,52,946  என்ற அளவில் இருக்கும். 

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.