Who Is Prakash In Vidaamuyarchi? ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதைப்படி, த்ரிஷாவிற்கு பிரகாஷ் என்ற பெயரில் ஒரு காதலன் இருப்பதாக கூறப்பட்டது.
விடாமுயற்சி படத்தின் கதை:
இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம், விடாமுயற்சி. இந்த படம் 1997ஆம் ஆண்டு வெளியான பிரேக்கிங் டவுன் திரைப்படத்தின் தமிழ் தழுவல் ஆகும்.
விடாமுயற்சி படத்தின் கதைப்படி, காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுனும் (அஜித்) கயலும் (த்ரிஷா) தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் கயல் தனக்கு பிரகாஷ் என்பவருடன் தொடர்பு இருப்பதாக கூறி பிரிய வேண்டும் என முடிவெடுக்கிறார். இதையடுத்து Tbilisi-யில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கயல் கூறுவார். இதைக்கேட்கும் அர்ஜுன், தன்னிடம் நேர்மையாக உண்மையை கூறிய மனைவி மீது கோபப்படாமல், கடைசியாக ஒரே ஒரு ரோட் ட்ரிப் மட்டும் செல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு கயலும் சம்மதம் தெரிவிப்பார். இதற்கடுத்துதான் கடத்தல், ரன்னிங், சேசிங், ஃபையரிங், ஃபைட்டிங் என அனைத்தும் நடக்கும்.
யார் அந்த பிரகாஷ்?
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை, ஒரு படத்தில் ஹீரோயினாக வருபவர் அந்த ஹீராேவை மட்டும்தான் காதலிக்க வேண்டும். அதற்கு மாறுப்பட்டு அவர் வேறுமாதிரி இருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் கொஞ்சம் மாறுப்பட்டு இருந்ததது. கடைசியில் அஜித்தும் த்ரிஷாவும் சேர்ந்தது அனைவருக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் “யார் அந்த பிரகாஷ்?” என்ற கேள்வி அனைவர் மனதிலும் நிலவி வந்ததது. காரணம், கடைசி வரை அந்த பிரகாஷ் கதாப்பாத்திரம் யார் என்பதை படத்தில் கூறவே இல்லை. இது குறித்து சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் மகிழ் திருமேனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்துள்ள பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உண்மையான கேரக்டரா?
பிரகாஷின் கதாப்பாத்திரம் குறித்து பதிலளித்த மகிழ் திருமேனி, அந்த கேரக்டர் படத்தில் உண்மையாக இருக்கும் கேரக்டராகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று கூறினார். “கயலின் கதாப்பாத்திரம் திருமண உறவில் இருந்து விலக வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு பொய்யை சொல்லியிருக்கலாம், அப்படி இல்லையென்றால் அவர் கூறியது உண்மையாகவும் இருக்கலாம், அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆடியன்ஸ் கையில்தான் இருக்கிறது” என்று அவர் கூறியிருந்தார். இதைக்கேட்ட பல ரசிகர்கள் கயலின் கதாப்பாத்திரம் தங்கமானதுதான் என்றும், அவர் பிரகாஷ் என்ற ஒரு பொய் கதாப்பாத்திரத்தை உருவாக்கி திருமண உறவில் இருந்து விலக நினைத்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அட, வித்தியாசமா இருக்கே!
மேலும் படிக்க | மீண்டும் மீண்டுமா? அஜித்தின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ