அரசு நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள், சச்சினுக்கு சிவசேனா அறிவுரை!

பத்ம ஸ்ரீ, துரோணாச்சாரியர் விருது பெற்ற ராமாகந்த் அவர்களுக்கு ஏன் அரசு மரியாதை அளிக்கப்படவில்லை என சிவ சேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜெய் ராவுட் கேள்வி எழுப்பியுள்ளார். 

Last Updated : Jan 4, 2019, 10:41 AM IST
அரசு நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள், சச்சினுக்கு சிவசேனா அறிவுரை! title=

பத்ம ஸ்ரீ, துரோணாச்சாரியர் விருது பெற்ற ராமாகந்த் அச்ரேக்கர் அவர்கள் கடந்த புதன் அன்று மூப்பு காரணமாக காலமானார். நாட்டிற்கு பெருமை சேர்த்த அவரை ஏன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவில்லை என சிவசேனா கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளரும், துரோணாச்சாரியர் விருது பெற்றவருமான ராமாகந்த் அச்ரேக்கர் புதன் அன்று தனுத 87-வது வயதில் மும்பையில் காலமானார். வயது முதிவு காரணமாக ராமாகந்த் உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே, பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர்.

பத்ம ஸ்ரீ, துரோணாச்சாரியர் விருது பெற்ற ராமாகந்த் அவர்களுக்கு ஏன் அரசு மரியாதை அளிக்கப்படவில்லை என சிவ சேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜெய் ராவுட் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ராமாகந்த் அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்க மறுத்த மஹாராஸ்டிர அரசின் நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்க கூடாது எனவும் அறிவுருத்தியுள்ளார்.

ராமாகந்த் அவர்களின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில், மாநில அரசு சார்பாக அமைச்சர் பிரகாஷ் மேதா பங்கேற்றும், ராமாகந்த் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருந்தது தனக்கு வருத்தம் அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News