மத்திய இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேலுக்கு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல்துறையின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட இருவரும் ஜூன் மாதம் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேலுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்துள்ளனர்.
படேல் அழைப்பை எடுத்துடன், ஒரு ஆபாச வீடியோ ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது, அதைத் தொடர்ந்து அமைச்சர் அழைப்பைத் துண்டித்துவிட்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து அமைச்சருக்கு மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதில், ஆபாச வீடியோவை பார்த்த அவரின் வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்.
ராஜஸ்தானில் கைது
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகமது வாக்கீல் மற்றும் முகமது சாஹிப் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இருவரையும் ராஜஸ்தானில் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வேறு பலருக்கும் தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, அமைச்சர் பிரஹலாத் இந்த விஷயம் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜூன் மாதத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு பிரிவு, மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்த நம்பரில் இருந்து கால் வந்தா எடுக்காதீங்க... சிக்கினால் அவ்வளவு தான்!
முன்னதாக, கடந்த மே மாதம் டெல்லி போலீசார் பாலியல் வன்கொடுமை மோசடியை முறியடித்தனர். அதாவது, சமூக ஊடகங்களில் தங்களின் அந்தரங்க உரையாடல்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பலரிடம் இருந்து ரூ.7 லட்சத்துக்கு மேல் பணம் பறித்ததாக 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஷாஹ்தாராவில் வசிக்கும் 27 வயது நபர் கடந்த மார்ச் மாதம், தெரியாத எண்ணில் இருந்து தனக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்ததாகக் கூறியதை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அழைப்பிற்கு பதிலளித்தபோது, ஒரு பெண் ஆபாசமான செயலில் ஈடுபட்டதைக் கண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த நபர் தன்னை டெல்லி போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திய நபர்களிடம் இருந்து மிரட்டி பணம் பெறத் தொடங்கினார். அந்த தொகையை கொடுக்காவிட்டால், புகார்தாரரின் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் பரப்பி விடுவதாக அவர்கள் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் மொத்தம் ரூ. 2 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் சைபர் குற்றங்கள், மோசடிகள் ஆகியவை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இது பெரும்பாலும் சாமனிய மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து தான் நடக்கிறது. அந்த வகையில், சைபர் மோசடிக்காரர்கள் மத்திய இணையமைச்சர் வரை வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் படிக்க | நாய் கடித்த சிறுமி சாகும் முன் 40 பேரை கடித்த சம்பவம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ