SBI வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி வரம்பினை ₹40 ஆயிரத்திலிருந்து ₹20 ஆயிரமாக குறைக்கப்படுகிறது!
நாட்டின் பிரதாண வங்கியான SBI தனது வாடிக்கையாளர் தங்களது கணக்கில் இருந்து ATM அட்டைகள் மூலம் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பினை ₹40 ஆயிரத்திலிருந்து ₹20 ஆயிரமாக குறைப்பதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி அப்டோபர் 31-ஆம் நாள் முதல் கிளாசிக் மற்றும் மாஸ்ட்ரோ ATM அட்டைகள் கொண்டு பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் ₹20 ஆயிரம் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்க முடியும் என தெரிவித்தது. மேலும் இந்த வகை ATM அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறுவகை ATM அட்டைகளுக்க விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
Daily Cash withdrawal limits for Classic and Maestro Debit Cards reduced from Rs. 40,000/- to Rs. 20,000/- per day with effect from 31st Oct 2018: State Bank of India (SBI) pic.twitter.com/XxGOJ1WVAb
— ANI (@ANI) October 30, 2018
ATM அட்டைகள் கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுப்படும்போது அதிக அளவில் மோசடி நடப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ATM அட்டைகள் கொண்டு பணம் பெறுவதற்க்கான வரம்பு குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் SBI தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது என தற்போது SBI தெரிவித்துள்ளது.