ஊழல் விசியத்தில் சமரசம் இல்லை - பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்!!

Last Updated : Jul 27, 2017, 02:54 PM IST
ஊழல் விசியத்தில் சமரசம் இல்லை - பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்!! title=

இன்று பீகார் மாநில முதல்வராக தவியேற்ற நிதிஷ் குமார், பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இன்று பீகார் மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பீகார் மாநில முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், வாழ்த்துக்கள் கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக பீகார் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.

முன்னதாக, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக நீடித்து வந்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி இருந்து வந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வி மீது மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்து இருந்தது. இதனால் தேஜஸ்வியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார் நிதிஷ் குமார். ஆனால், இதை தேஜஸ்வி மறுத்த நிலையில், நிதிஷ்குமார் திடீரென நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவு கொடுக்க பாஜக முன் வந்தது.

இந்த நிலையில் இன்று முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுசில் குமார் மோடி பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News