புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!

சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு புத்தாண்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2022, 08:33 PM IST
  • சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அரசு எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என நம்பிக்கை.
  • 2022 எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.150 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்கள் விலை குறையவில்லை.
புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு! title=

LPG சிலிண்டர் விலை: புத்தாண்டில் உங்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படலாம். புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டில் சமையல் எரிவாயு (LPG) விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைப்பதன் மூலம் அரசு எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோருக்கு அளிக்கும் பலன்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்கள் விலை குறையவில்லை. தற்போது தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.1053 செலுத்த வேண்டும். கொல்கத்தாவில் ரூ.1079, மும்பையில் ரூ.1052.50, சென்னையில் ரூ.1068 என்ற அளவில் உள்ளது. அதே நேரத்தில், பாட்னாவில் ரூ.1151, லக்னோவில் ரூ.1090 செலுத்த வேண்டும். 6 ஜூலை 2022 முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு

2022 எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.150 என்ற அளவில் அதிகரித்துள்ளது

2022 ஆம் ஆண்டில், அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சுமார் 150 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 2021 இல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $ 85 ஆக இருந்தபோது, ​​​​சமையல் எரிவாயு ரூ 899 க்கு கிடைத்தது. தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 83 டாலராகவும், இந்தியாவிற்கான விலை பேரலுக்கு 77 டாலராகவும் உள்ளது. இதனால்தான், உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அரசு எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ள விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பாக மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. பாரத் ஜோடோ யாத்ராவில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, விலையுயர்ந்த சமையல் எரிவாயு குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார்.  மேலும் 2014 ஆம் ஆண்டு வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.414க்கு எப்படி கிடைத்தது என்பதை நினைவுபடுத்தியுள்ளார். மறுபுறம், ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கம் ஏப்ரல் 1, 2023 அன்று ரூ.500க்கு சிலிண்டர்கள் தருவதாக உறுதியளித்துள்ளது, ஜெய்ப்பூரில் தற்போதைய விலை சிலிண்டருக்கு ரூ.1056. அதாவது, மக்களுக்கு பாதி விலையில் எல்பிஜி சிலிண்டர்களை மாநில அரசு வழங்கும். ராஜஸ்தான் அரசின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால்தான் புத்தாண்டில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ’இதெல்லாம் பொய்யா?’ சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News