ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் தீவிரவாதி உமர் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்போராவில், பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரரவாதி உமர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்தவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.