மலிவு விலையில் கடன் வழங்கும் கிசான் கிரெட் கார்டு: விவசாயிகளுக்கு வந்த முக்கிய அப்டேட்

Kisan Credit Card: பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகளை வாங்குவதற்கும், பயிர் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2025, 04:15 PM IST
  • கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன?
  • கிசான் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என்றால் என்ன?
மலிவு விலையில் கடன் வழங்கும் கிசான் கிரெட் கார்டு: விவசாயிகளுக்கு வந்த முக்கிய அப்டேட் title=

Kisan Credit Card: விவசாயிகள் நலனுக்கான மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்து வருகின்றது. இதில் கிசான் கிரெடிட் கார்டு திட்டமும் முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சகம், செயல்பாட்டு கிசான் கிரெடிட் கார்டின் கீழ் உள்ள தொகை, 2024 டிசம்பரில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியதாகக் கூறியது. இந்த தொகை மார்ச் 2014 இல் ரூ.4.26 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மலிவு விலை மூலதனக் கடன்களின் அளவில் கணிசமான அதிகரிப்பை இது பிரதிபலிக்கிறது என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இது விவசாயத் துறையில் கடன் ஆழமடைவதையும், நிறுவனம் சாராத கடனைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் பிரதிபலிக்கிறது" என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன?

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் கடன் வழங்கப்படுகின்றது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகளை வாங்குவதற்கும், பயிர் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த கார்டு மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டில், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்பிடித்தல் போன்ற கூட்டு நடவடிக்கைகளின் மூலதனத் தேவைகளை உள்ளடக்க இந்த விரிவாக்கம் செய்யப்பட்டது. 

Modified Interest Subvention Scheme

மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (MISS) கீழ், அரசாங்கம், கிசான் கிரெடிட் கார்டு மூலம் ஆண்டுக்கு 7% சலுகை வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால விவசாயக் கடன்களை வழங்குவதற்காக வங்கிகளுக்கு 1.5% வட்டி மானியத்தை வழங்குகிறது.

கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3% கூடுதல் உடனடி திருப்பிச் செலுத்தும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தை 4% ஆகக் குறைக்கிறது. ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் பிணையமில்லாத அடிப்படையில் நீட்டிக்கப்படுகின்றன. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரச்சனை இல்லாத கடன் அணுகலை உறுதி செய்வதாக்க கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட் உரையில், MISS இன் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

KCC: கிசான் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

- கிசான் கிரெடிட் கார்டு 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்களை எளிய வழிகளில் கிடைக்கச்செய்கிறது. 

- KCC மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூகூறியுள்ளார்.

- டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, 7.72 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், கிசான் சிரெடிட் கார்டுகளின் கீழ் ரூ.10.05 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அனைவருக்கும் பென்ஷன்... வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலை இல்லை: அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: Fitment Factor என்றால் என்ன? ஊதிய உயர்வை இது எப்படி தீர்மானிக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News