கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் கூட கேட்டு இருக்கலாம். திருமணம் என்பது வாழ்க்கையை மிக முக்கிய கட்டம். நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை, வாழ்நாள் முழுவதும் இணைந்து பயணிக்கும் அற்புதமான ஒரு உறவாக இருக்க வேண்டும்.
இல்லறம் நல்லறமாக அமைய சில குணங்கள் அவசியம். பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், பரஸ்பரம் புரிதல், விட்டுக் கொடுத்து வாழுதல், வாழ்க்கை சுமைகளை பங்கு போட்டுக் கொண்டு, பயணித்தல் ஆகியவை அவசியம்.
திருமண வாழ்க்கையில் பரஸ்பரம் உணர்வுகளை புரிந்து கொள்ளாததாலும், கருத்து வேறுபாடுகளாலும் திருமண முறிவு என்பது சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது. இந்நிலையில், சந்தோஷமான வாழ்க்கை அமைய, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் திருமணம் செய்யப் போகும் அவனிடம் கீழே குறிப்பிட்டுள்ள தன்மைகள் இருக்கின்றதா என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மாப்பிள்ளை இடம் கீழே குறிப்பிட்டுள்ள குணங்கள் உள்ளதா என்பதை புரிந்து கொள்வது நல்லது.
கோப உணர்வை கட்டுப்படுத்தும் திறன்
கோபம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உணர்ச்சி தான். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்தக் கோபம் வரும் போது நான் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம். கோப உணர்விலும், ஒருவருக்கு தன் வார்த்தையையும் செயலையும் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்திருந்தால், அவரை சிறந்த ஆளுமையாக கருதலாம்.
குறைகளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் திறன்
குறை இல்லாத மனிதரை பார்ப்பது அரிது. நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில், குறை இருக்கலாம். அதனை ஏற்றுக் கொண்டு புரிந்து நடப்பவர்களால் பிரச்சனை வருவதில்லை. தன்னிடம் உள்ள குறைகளை அல்லது செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் போது, அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சரி எது தவறு எது என்பதை சீர்தூக்கிப் பார்க்கும் திறன்
குடும்ப உறவுகள் மத்தியில், தனது மனைவியிடம் நியாயம் இருக்கும் நிலையில், விட்டுக் கொடுக்காமல் நடக்கும் தைரியம் ஆண் மகனுக்கு இருக்க வேண்டும். நெருங்கிய உறவுகள் அத்துமீறி நடக்கும் போது, சரி எது தவறு எது என்று ஆழமாக சிந்தித்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.
பிறர் மீது பழி போடும் தன்மை ஆபத்தானது
தவறுகளில் இருந்து தப்பிக்க, பிறர் மீது பழி போடுவது மிகவும் ஆபத்தான குணமாகும். இந்த குணம் உள்ளவரை ஆளுமை உள்ள ஆண் மகனாக கருத முடியாது. திருமணத்திற்கு பின், தான் செய்த தவறுகளை மறைக்க, மனைவி மீது பழி போடும் ஆபத்து அதிகம் உள்ளது.
மேலும் படிக்க | ஒரு பெண்ணுக்கு காதல் தீர்ந்து போகும் தருணம்! எது தெரியுமா?
சுயநலமே பிரதானமாக இருப்பவர்கள்
மற்றவர்களை பற்றி யோசிக்காமல், அவர்களது உணர்வுக்கு துளியும் மரியாதை கொடுக்காமல் இருப்பவர்கள் திருமணம் செய்ய தகுதி இல்லாதவர்கள் எனலாம். இவர்களால் வாழ்க்கையில் பிறருக்கு சந்தோஷத்தை கொடுக்க இயலாது.
மேலே குறிப்பிட்டுள்ள குணங்களை ஆராய்ந்து பார்த்து, மணமகன் அல்லது காதலன் உங்களுக்கு ஏற்றவர் தானா என்பதை முடிவு செய்வதால், திருமணத்துக்கு பின் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | அழகு முக்கியமில்லை..‘இந்த’ 7 குணங்கள் இருந்தா வசீகரமா இருப்பீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ