EPS Pension Calculator: ரூ.40,000 அடிப்படை சம்பளத்திற்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

EPS Pension Calculation: ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதிய வருமானத்தை வழங்கும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பற்றி இந்த பதிவில் காணலாம். இபிஎஸ் மூலம் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய பயன்களை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2025, 05:12 PM IST
  • EPS-க்கான தகுதி என்ன?
  • மாதாந்திர EPS ஓய்வூதியத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா?
  • குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை என்ன?
EPS Pension Calculator: ரூ.40,000 அடிப்படை சம்பளத்திற்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ title=

EPS Pension Calculation: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. குறிப்பாக வயோதிகத்தில் இந்த தேவை அதிகரிக்கின்றது. ஆனால், அப்போது நம்மால் இள வயதில் உள்ளது போல வழக்கமான வழிகளில் பணம் ஈட்ட முடிவதில்லை. ஆகையால், முதுமை காலத்திற்கான திட்டமிடலை இள வயதிலேயே தொடங்குவது மிக அவசியமாகும்.

Pension: ஓய்வூதியத்திற்கான பல வழிகள்

ஓய்வூதியத்திற்கான உங்கள் நிதியைத் திட்டமிட பல்வேறு வழிகள் உள்ளன. திட்டமிடல் உங்கள் நிதி இலக்குகளை தீர்மானம் செய்வதன் மூலம் தொடங்குகிறது. ஓய்வூதியத் திட்டங்களில் EPF எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund), PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), NPS எனப்பட்ம் தேசிய ஓய்வூதிய முறை (National Pension Scheme) மற்றும் மியூசுவல் ஃபண்டுகளில் SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan) ஆகியவை அடங்கும். 

ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிக்க தங்கள் பணத்தை எங்கே போடுவது என்பது குறித்து பலருக்கு பெரும்பாலும் பெரிய குழப்பம் ஏற்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதிய வருமானத்தை வழங்கும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பற்றி இந்த பதிவில் காணலாம். இபிஎஸ் மூலம் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய பயன்களை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 

ரூ.40,000 அடிப்படை ஊதியம், 30 ஆண்டுகள் சேவை மற்றும் தற்போதைய வயது 30 இருக்கும் ஒரு நபருக்கு மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

EPS என்றால் என்ன?

இது ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதில்  அனைத்து EPF உறுப்பினர்களும் தானாகவே சேர்க்கப்படுகிறார்கள்.

EPS இல் பங்களிப்பு

முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் EPS க்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் EPF க்கு செல்கிறது. அதிகபட்ச பங்களிப்பு வரம்பு 12 சதவீதம் ஆகும்.

EPS-க்கான தகுதி என்ன?

- EPS ஓய்வூதியத்தைப் பெற ஒருவர் EPFO ​​உறுப்பினராக இருக்க வேண்டும்.
- சேவை காலம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்
- ஆரம்பகால ஓய்வூதியம்: 50 வயதில் கிடைக்கும்
- முழு ஓய்வூதியம்: 58 வயதில் கிடைக்கும்

EPS ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி

EPS ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்க ஊழியர்கள் படிவம் 10D-ஐ நிரப்பி EPS சான்றிதழைப் பெற வேண்டும்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர் 58 வயதை அடைவதற்கு முன்பு 10 ஆண்டுகள் சேவையை முடிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு ஊழியர் 58 வயதை அடைவதற்கு முன்பு 10 ஆண்டுகள் சேவையை முடிக்கவில்லை என்றால், அவர்கள் 58 வயதில் படிவம் 10C ஐப் பயன்படுத்தி முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்குமா? மேலே குறிப்பிடப்பட்ட சூழ்நிலையில், ஒரு ஊழியர் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியாது. அதற்கு, அவர்கள் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.

மாதாந்திர EPS ஓய்வூதியத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா?

ஆம், EPS இல் நீங்கள் அதிகபட்சமாக ரூ.15,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும். இந்த வரம்பை அதிகரிக்க இப்போது கோரிக்கை விடுக்கபட்டு வருகிறது.

குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை என்ன?

குறைந்தபட்சத் தொகை மாதத்திற்கு ரூ.1,000 ஆகும்.

ரூ.40,000 அடிப்படை சம்பளம், 30 ஆண்டுகள் சேவை: இந்த சூழ்நிலையில் உங்கள் மாதாந்திர EPS ஓய்வூதியத் தொகை என்னவாக இருக்கும்?

EPS ஓய்வூதிய சூத்திரத்தின்படி (ஓய்வூதிய சம்பளம் X ஆண்டுகள் சேவை/70), மாதாந்திர ஓய்வூதியம் ரூ.17,142.9 ஆக இருக்கும். இருப்பினும், மாதாந்திர ஓய்வூதிய சம்பளத்திற்கு ஒரு வரம்பு உள்ளது. ஆகையால், பங்களிப்பாளர் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 பெறுவார்.

EPS Nomination for EPF Subscribers: இபிஎஸ் நாமினேஷன்

இபிஎஃப் சந்தாதார்ரகள், மனைவி, குழந்தைகள், பெற்றோர் போன்ற எந்த குடும்ப உறுப்பினரையும் நாமினியாக பரிந்துரைக்கலாம். குடும்பம் இல்லாத பட்சத்தில், ஊழியர் யாரை வேண்டுமானாலும் நாமினியாக தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க | சீனியர் சிட்டிஸன் FD... யாருக்கெல்லாம் TDS கழிக்கப்படாது... முழு விபரம் இங்கே

மேலும் படிக்க | மலிவு விலையில் கடன் வழங்கும் கிசான் கிரெட் கார்டு: விவசாயிகளுக்கு வந்த முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News