டெல்லி உயர் நீதிமன்றத்தில், எரிவாயு சர்ச்சை தொடர்பான வழக்கில், ONGC நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வெளிவந்த இந்த தீர்ப்பின் மூலம் அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நிவாரணமாக ரூபாய் 25,000 கோடி அபராத தொகையை வசூலிக்கலாம். எனினும் ஓஎன்ஜிசி, இது குறித்த தகவல் எதையும் இந்திய பங்குச் சந்தை வாரியமான செபிக்கு தகவல் ஏதும் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.
செபி (SEBI) விதிகளின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தனது பங்குதாரர்களுக்கு, நிறுவனத்தின் பங்கு விலையை பாதிக்கக் கூடிய தகவல்களை வெளியிட வேண்டும். இருப்பினும், ONGC தனது பங்குதாரர்களுக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என தெளிபடுத்தியுள்ளனர் நிபுணர்கள். ஏனெனில், ONGC இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு தான் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விபரம்
2003 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கேஜி பேசின் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசியின் பிளாக்குகளில் இருந்து சட்டவிரோதமாக இயற்கை எரிவாயு எடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒற்றை நீதிபதி அடங்கிய நீதிமன்ற பிரிவு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேகா பாட்டீல் மற்றும் சவுரவ் பானர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. 2023 மே மாதத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வெளியான நடுவர் மன்ற தீர்ப்பை ரத்து செய்வதற்கான போதுமான காரணங்கள் இருப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களான UK யை சேர்ந்த BP மற்றும் கனடாவின் நிக்கோ ரிச்சோஸ் நிறுவனத்துடன் இணைந்து, விதிகளுக்கு மாறாக, எண்ணெய் வளங்களை எடுக்க அனுமதி ஏதும் இல்லாத, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, எண்ணெய் வளங்களை எடுத்ததாகவும், 1.729 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் வளங்கள் சுரண்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ