கார் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்! வைரல் வீடியோ..

Latest Viral Video Woman Laptop While Driving Car : ஒரு சிலரை பார்க்கும் போது, உங்கள் கடமை உணர்விற்கு ஒரு அளவில்லையா என்று கேட்க தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2025, 06:03 PM IST
  • லேப்டாப் பார்த்துக்கொண்டே கார் ஓட்டிய பெண்..
  • இணையத்தில் எழுந்த கண்டனம்..
  • வைரலாகும் வீடியோ..
கார் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்! வைரல் வீடியோ.. title=

Latest Viral Video Woman Laptop While Driving Car : வாழ்வதற்காக வேலை பார்ப்பதற்கும், வேலை பார்ப்பதற்காகவே வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள், தங்களது பணியில் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

இந்திய நகரங்களிலேயே பெங்களூருவில்தான் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். உதாரணத்திற்கு ஒருவர் விமான நிலையத்திற்கு மதியம் 12 மணிக்கு செல்ல வேண்டும் என்றால், காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். இந்த டிராஃபிக் ஜாமை கடந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கே 4 மணி நேரம் ஆகி விடும். இதனால், இப்படிப்பட்ட வாகன நெரிசலில் சிக்கிக்கொள்பவர்கள், காரில் அமர்ந்தவாறு காய்கறி நறுக்குவது, பூ கட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் நடக்கும். அப்படித்தான் ஒரு பெண்ணும் காரில், டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில் அப்பெண் காரைதான் ஓட்டிக்கொண்டு செல்கிறார். ஆனால், அவருக்கு முன்பு லேப்டாப் திறந்து வைக்கப்பட்டு அதில் டேப்களும் ஓபன் செயப்பட்டிருக்கிறது. அவருக்கு முன்னால் சில கார்களும் செல்கின்றன. இதை அருகில் இருக்கும் வண்டியில் செல்லும் ஒருவர் படம் பிடித்திருக்கிறார்.

கண்டனங்கள்:

இந்த பெண், இப்படி லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு கார் ஓட்டும் வீடியோவிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பெங்களூருவின் துணை போலீஸ் கமிஷனர் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதன் பிறகு அந்த பெண்ணை நேரில் சந்தித்து, அவரது செயலுக்காக அபராதமும் விதித்திருக்கின்றனர். அந்த பெண்ணை சந்தித்தையும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “வீட்டிலிருந்து வேலையை பாருங்கள், காரில் இருந்து அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து..

ஒரு சிலர், இது போன்றவர்களை உடனே கண்டு பிடித்து அவர்களை தப்பை உணர வைத்ததற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலர், “நல்ல வேலை செய்தீர்கள். இப்படி தனது உயிரையும் பிறர் உயிரையும் பணயம் வைக்கும் நபர்களிடமிருந்து எங்களை காப்பாற்றியதற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..

மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News