லடாக்கில் வலுவான நிலையில் இந்தியா... Pangong Tso தெற்கு பகுதி ஏன் முக்கியமானது..!!!

இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என்றாலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 04:16 PM IST
  • இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது.
  • இருப்பினும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது.
  • பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுஷூலில் ஒரு பிரிகேட் கமாண்டர் நிலை கொடி கூட்டம் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது.
லடாக்கில் வலுவான நிலையில் இந்தியா... Pangong Tso தெற்கு பகுதி ஏன் முக்கியமானது..!!! title=

இந்திய துருப்புக்கள் லடாக்கில் (Ladakh) உள்ள பாங்காங் த்சோ (Pangong Tso) ஏரியின் தெற்கு கரையில், நமது எல்லை பகுதிக்குள் அத்து மீறிய சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுத்து,  ராணுவம் தங்கள் நிலைப்பாடுகளை வலுப்படுத்திக் கொண்டது.  சீனாவின் சதி நடவடிக்கையை முறியடித்தன. 

இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என்றாலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது. 

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுஷூலில் ஒரு பிரிகேட் கமாண்டர் நிலை கொடி கூட்டம்  நடத்தப்பட்டதாகவு இந்திய ராணுவம் கூறியிருந்தது.

சீன துருப்புக்கள் உள்ளே நுழைவதை மிக எளிதாக தடுக்கும் வகையில், மிக உயரமான பகுதியில்  இந்திய துருப்புக்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. தாகுங் தளத்தின் கிழக்கே உள்ள பகுதி எப்போதும் இந்திய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனா ஆக்கிரமிக்க நினைக்கும் பாங்கோங் ஏரி பற்றி அறிந்து கொள்ளலாம். 

இந்தி திரைப்படமான 3 இடியட் படத்தில் பேங்கோங் த்சோ ஏரியை பார்த்திருப்பீர்கள்.  இது இந்தியாவின் லடாக் பிராந்தியத்திலும், ஓரளவு திபெத்திலும் உள்ளது. ஏரியின் பெயர், இந்திய திபெத்  கலப்பு பாரம்பரியத்தை குறிக்கிறது. லடாக்கியில் பாங்கோங் என்றால் ஒற்றுமை என பொருள். த்சோ என்ற சொல் திபெத்தில் ஏரி என பொருள்.

சுமார் 4,270 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பாங்காங் ஏரி, கிட்டத்தட்ட 135 கி.மீ நீளமுள்ள, குறுகிய ஏரியாகும். அதன் அகலமான இடம் 6 கி.மீ. நீளத்தில் பூமராங் வடிவத்தில் காணப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு 600 சதுர கி.மீ.
 
மேலும் படிக்க | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!

சுஷுல் அணுகுமுறை என அழைக்கப்படும் இப்பகுதி, சமவெளிகளின் காரணமாக, தாக்குதலுக்கு ஏவுதளங்களாக பயன்படுத்தக்கூடிய சிறந்த பகுதிகளில் சிலவற்றில் ஒன்றாகும். 1962 மோதலின் போது, ஏரியின் வடக்கு பகுதி தெற்கு பக்டுஹி இரண்டையும் சீனா தாக்கியது. இந்தியா இரண்டிலும் நிலப்பரப்பை இழந்தது. ஏரியின் வடக்கில்  - முதலில் சிரிஜியாப் என்ற பகுதியையும், பின்னர் முழு வடக்கு பகுதியையும் இழந்தது. தென் கரையில் இந்தியா யூலாவில்  உள்ள சில நிலைகளை விட்டும் வெளியேறி, குருங் மலையின் வடக்கே ஒரு உயர்ந்த பகுதிக்கு சென்று நிலை கொள்ள வேண்டியிருந்தது.

தற்போது இந்தியா, பாங்காங் த்சோ ஏரியின் தெற்கு பகுதியில், சீனாவின் அத்துமீறலை தக்க பதிலடி கொடுத்து இந்திய ராணுவம் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 

பாங்காங் ஏரி  மிகவும் உயரமான பகுதி என்பதாலும், தாக்குதல் என்று வந்தால், இந்த நிலை மிகவும் தாக்குதல் நடத்த மிகவும் சாதகமாக இருக்கும் என்பதாலும், மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும் படிக்க | கால்வான் மோதலில் உயிரிழந்த சீன சிப்பாயின் கல்லறை படம் வைரல்..!

அதனால் தான் சீனா இதை ஆக்கிரமிக்க நினைக்கிறது. ஆனால், ஜூன் மாதம் 15ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா மிகவும் தீவிரமான கண்காணித்து வருகிறது. கூடுதல் துருப்புகளை எல்லை பகுதியில் நிறுத்தியுள்ளது.

Trending News