Indira Grah Jyoti Yojana: மின்சார கட்டணத்தில் மத்திய பிரதேச (Madhya Pradesh) மக்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் விதமாக, அம்மாநில அரசு இந்திரா கர ஜோதி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதோடு, மின்சாரத்தையும் அரசு மிச்சப்படுத்துகிறது. இந்திரா கர ஜோதி யோஜனாவிலும் மத்தியப் பிரதேச அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது மேலும் சில சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதே போல் இந்த திட்டத்தில் மாதத்திற்கு வீடுகளின் மின்சாரம் கட்டணம் (Electricity Bill) ரூ .100 மட்டுமே இருக்கும்.
இந்திரா கர ஜோதி (Indira Grah Jyoti Yojana) யோஜனாவில் 100 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் குடும்பம் ரூ .100 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய பிரதேச வித்யுத் நிகாம் தெரிவித்துள்ளது. 150 யூனிட் மின்சாரம் செலவழிக்கும்போது, மின்சார பில் 384 ரூபாயாக உயரும்.
ALSO READ | ஒரு குடிசை வீட்டுக்கு மின்சார கட்டணம் 128 கோடி... அதிர்ச்சியான தாத்தா
ஒருவர் 151 யூனிட்க்கு மேல் மின்சாரத்தை செலவிட்டால், அவருக்கு இந்திரா கர ஜோதி யோஜனாவின் பலன் கிடைக்காது.
திட்டத்திற்கு முன் மின்சார கட்டணம்
இந்திரா கர ஜோதி யோஜனாவுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் 100 யூனிட் மின்சாரம் ரூ .634 செலுத்த வேண்டியிருந்தது. 150 யூனிட் மின்சாரத்திற்கான பில் 918 ரூபாய் ஆக இருந்தது.
ALSO READ | 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, 100 யூனிட் பயன்படுத்டும் நுகர்வுக்கு அரசு 534 ரூபாய் மானியத்தை வழங்குகிறது. இந்திரா கர ஜோதி (Indira Grah Jyoti Yojana Subsidy) யோஜனாவின் கீழ் வரும் பயனர்களின் வீட்டின் மின்சார பில் வேறு நிறத்தில் இருக்கும்.
ALSO READ | சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்தினால் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது
மத்தியப் பிரதேச அரசு தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ .200 என்ற விகிதத்தில் மின்சாரம் வழங்குவதற்காக சரல் (சம்பல்) திட்டத்தை செயல்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தை, இந்திரா கர ஜோதி யோஜனாவில் ஒருங்கிணைத்துள்ளது.