டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

Diabetes Control Tips: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2024, 08:25 AM IST
  • வழக்கமான உடல்நல பரிசோதனை தேவை.
  • மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்.
  • வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை.
டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க title=

Diabetes Control Tips: இன்றைய காலகட்டத்தில் அதிகமான மக்கள் நீரிழிவு நோயின் பிடியில் சிக்கி வருகிறார்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் இன்னும் பல நோய்களும் நம்மை ஆட்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆகையால் இதில் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும். 

Type 2 Diabetes

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 15.8 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். 77 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சில எளிய இயற்கையான வழிகளில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆரோக்கியமான உணவு (Healthy Food)

டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று உடல் பருமனாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. உடல்ருமனை குறைக்க உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உணவில் போதுமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் அதிக பிரக்டோஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | குடல் வறட்சியை போக்கி மலச்சிக்கலை தீர்க்கும் தேங்காய் எண்ணெய்... அற்புத பலன்கள்..!

வாழ்க்கை முறை மாற்றங்கள் (Lifestyle Changes)

வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வது நல்லது. நல்ல தூக்கம், சமச்சீர் உணவு, தேவையான உடல் செயல்பாடுகள் ஆகியவவை அவசியம். அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெறுவதையும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி (Exercise)

டைப் 2 நீரிழிவு நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம். அதன் அதிகரிப்பு கொலஸ்ட்ரால், பிபி, எடை அதிகரிப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல நோய்களை அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த, உடற்பயிற்சி மிக முக்கியமானது. உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்ப்பது கூடுதல் பலன் தரும். வழக்கமான உடல் செயல்பாடுகளும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது உங்கள் இன்சுலின் அதிகரிக்கவும் உதவும்.

மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள் (Mental Tension)

மன அழுத்தம் டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும். ஏனெனில் இது இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆகையால், டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்வது மிக அவசியமாகும். நீங்கள் விரும்பினால், மன அழுத்தத்தைத் தவிர்க்க உங்கள் உணவிலும் மாற்றங்களைச் செய்யலாம். இது தவிர, மருத்துவரின் ஆலோசனையையும் அவ்வப்போது பெற வேண்டும். இதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

வழக்கமான உடல் நல பரிசோதனை (Health Check Up)

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், வழக்கமான உடல்நல பரிசோதனைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், உங்கள் நோயை பற்றி அவ்வப்போது நன்கு தெரிந்துகொள்ளலாம். மேலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருந்தால், அதை உடனடியாக குறைக்க முயற்சிகள் எடுக்கலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் டி குறைபாடு இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள், பருவகால நோய்கள் வராது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News