விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகுமா? இன்னும் 7 நாள் படப்பிடிப்பு பேலன்ஸ்!

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 /6

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் விடாமுயற்சி. அஜர்பைஜானில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.    

2 /6

லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் அஜித்துடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.  

3 /6

இந்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அவ்வப்போது படத்தில் இருந்து சில போஸ்டர்கள் மட்டுமே வெளியானது.  

4 /6

இந்த படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட Good Bad Ugly படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. ஆனால் விடாமுயற்சி பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.  

5 /6

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென்று விடாமுயற்சியின் டீசர் வெளியானது. குறிப்பாக அதில் பொங்கல் வெளியீடு என்று சொல்லப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.  

6 /6

ஆனால் விடாமுயற்சி படத்தில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.