Republic Day 2025: ஜன. 26ஆம் தேதியான நாளை நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. 1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுகொண்டதை அடுத்து அதனை நினைவுக்கூறும் வகையில், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியின் கடமை பாதியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய தேசிய கொடியை ஏற்றுவார்.
நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை, பெருமை ஆகியவற்று அடையாளமாக விளங்கும் இந்திய மூவர்ணக் கொடி குடியரசு தினத்தில் ஒரு விதமாகவும், சுதந்திர தினத்தில் வேறு விதமாகவும் ஏற்றப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா...? ஆம், ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போதும், ஜன. 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போதும் கொடி ஏற்றப்படுவதில் வித்தியாசம் இருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.
சுதந்திரத்தை போற்றும் சுதந்திர தினம்
முதலில், சுதந்திர தினம் குறித்து பார்ப்போம். சுமார் 200 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. இதனை ஆண்டுதோறும் கொண்டாடும் நிகழ்வுதான் சுதந்திர தினம் எனலாம். அதாவது, காலனிய ஒடுக்குமுறை, சுதந்திரமான புதிய தேசத்தின் எழுச்சி ஆகியவற்றின் அடையாளமாக அந்த நாள் அப்படியே வரலாற்றில் உறைந்துள்ளது.
மேலும் படிக்க | குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியாவில் 'ஜனவரி 26' குடியரசு நாள் ஆனது எப்படி?
சுதந்திர தினத்தில், டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நாட்டின் தேசிய கொடியை ஏற்றுவார். சுதந்திர தினத்தின்போது, கொடிக் கம்பத்தின் கீழே கொடி கயிறில் கட்டப்பட்டிருக்கும். தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது, பிரதமர் அந்த கொடியை கம்பத்தின் உச்சத்திற்கு ஏற்றுவார். இப்படி கொடியை ஏற்றுவது என்பது, நாட்டு மக்கள் கடுமையாகப் பெற்ற சுதந்திரத்தையும், சுதந்திர போராட்டத்தின் போது எண்ணற்ற தியாகிகள் செய்த தியாகங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது.
அரசியலமைப்பை போற்றும் குடியரசு தினம்
1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜன. 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களின் சட்டங்களை ஒழித்து, ஜனநாயக குடியரசு முறையில் சொந்தமான சட்டத்திட்டங்கள் மூலம் அரசாட்சி செய்வதை குறிக்கும் வகையிலும் இது உள்ளது.
எனவே, இந்த தினத்தில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றுவார். குறிப்பாக, சுதந்திர தினத்தை போல் அல்லாமல், குடியரசு தினத்தில் (76th Republic Day) கொடி ஏற்கெனவே கொடிக்கம்பத்தில் மேல் முடிச்சுபோட்டு கட்டப்பட்டிருக்கும். குடியரசு தலைவர் ஒரு இழு இழுத்து, அந்த முடிச்சை அவிழ்த்தாலே போதுமானதும். அப்போது, கொடியின் உள்ளே இருந்து பூக்கள் காற்றில் பறக்கும்.
இந்த வகையில் கொடியேற்றுவது, அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயகத்திற்கான நாட்டை உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது. கொடியேற்றும் விழாவைத் தொடர்ந்து நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை, நாட்டின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்புகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குடியரசு தினம் கொண்டாட முக்கிய காரணம் ‘இவர்’ ஒருவர்தான்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ