நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்கள் வரிசையில் நிற்கின்றது. அந்தவகையில் அஜித் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் சாதனையைப் பெற்றார். இது இந்தியா மட்டுமல்லாது உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. மேலும் அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கவுள்ளார் என்று பார்க்காலாம்.
அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த விடாமுயற்சியின் ‘சவடிக்கா’ பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. மேலும் இப்பாடலுக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைப் செய்து வருகின்றனர். அஜித் தன்னுடைய திறமையை நடிப்பில் மட்டுமல்லாமல் இதர செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி ஆர்வம் காட்டி வருகிறார்.
திரைத்துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய அஜித் தன்னுடைய திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
2025 வருடத் தொடக்கத்தில் கார் பந்தயத்தில் மாஸாக கார் ஓட்டி ரசிகர்களின் நெஞ்சைப் பறித்துவிட்டார்.
நாட்டின் 76வது குடியரசு தினத்தில் நாட்டின் உயரிய விருதுகளைச் சாதனையாளர்களுக்கு வழங்குவது வழக்கம். அந்தவகையில் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
அஜீத்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்குப் பின் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி இந்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
கார் பந்தயத்தில் அஜித்ஜ்குமார் 3வது இடத்தை பிடித்து இந்திய நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்துள்ளார்.
அஜித்தின் பல வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படத்திற்குச் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது.
அஜித் தான் நடிக்கும் அடுத்த படத்தில் ரெட் ஜெயிண்ட் தயாரிப்புடன் இணையவுள்ளார்.
அஜீத்குமாரின் அடுத்த படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகிறது.
அஜித் நடிக்கும் புதுப்படத்திற்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.