சைஃப் அலிகான் தாக்குதல்: பாலிவுட் நடிகர் வீட்டில் கடந்த 15ஆம் தேதி சைஃப் அலி கான் வீட்டில் மர்ம நபர் வீடு புகுந்து திருட முயற்சித்தார். அதனைத் தடுக்க சைஃப் அலிகான் முயன்ற போது அந்த நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான் ஆட்டோ மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 இடத்தில் அவரது உடலில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இரு காயங்கள் ஆழமாக ஏற்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. இதனை அடுத்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த அவர், 6 நாட்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
ஒருவர் கைது
இதற்கிடையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷரிபுல் என்பவர் தானே-வில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தரப்பில் இருந்து கூறினர்.
மேலும் படிங்க: அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் யார் யார்?
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷரிபுலின் தந்தையும் தனது மகனுக்கும் இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை, சிசிடிவி கேமராவில் இருக்கும் நபர் தனது மகன் இல்லை என்றும் கூறியிருந்தார்.
சைஃப் அலிகான் தாக்குதலில் திடீர் திருப்பம்
இந்த நிலையில், சைஃப் அலி கான் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிட்டதட்ட 19 செட் கைரேகைகள் போலீசாரால் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு கைரேகை கூட, கைது செய்யப்பட்ட ஷரிபுல் இஸ்லாமின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை.
சைஃப் அலி கான் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கைரேகைக்ளை மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் கைரேகை பிரிவுக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். அதை ஷரிபுல் இஸ்லாமின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்று கூட ஒத்துப்போகவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிங்க: ரஞ்சி விளையாட தயாராகும் விராட் கோலி.. வீடியோ வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ