SIP Mutual Fund Investment Tips: கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவெ எல்லோருக்குமே இருக்கும். ஆனால் சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அதற்கு உதவுவது திட்டமிட்ட முதலீடு.
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முறையானது, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், ரூ.6 கோடிக்கு மேல் சம்பாதிக்கலாம். இது நீண்ட காலத்திற்கு சேமிப்பு மற்றும் வரி சலுகைகளை வழங்குகிறது.
SIP மூலம் சீரான இடைவெளியில், குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்யலாம். இந்த முதலீடு கூட்டு வட்டி வருவாயுடன் சிறப்பாக வளர்கிறது. காலப்போக்கில், நீண்ட கால நிலையான குறைந்த அளவிலான முதலீடுகூட கோடிக்கணக்கில் பணம் சேர வழிவகுக்கும்.
20-20-20 ஃபார்முலாவைப் பயன்படுத்தி ரூ.6 கோடி நிதியை உருவாக்கலாம். அதாவது நீங்கள் SIP இல் ஒவ்வொரு மாதமும் ரூ. 20,000 முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, 20% வருமானம் தரும் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து, இந்த முதலீட்டை 20 ஆண்டுகளுக்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர வேண்டும்.
ரூ.6 கோடி வருவாய்க்கான கணக்கீடு: நீங்கள் 20 சதவீத வருடாந்திர வருமானம் தரும் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ. 20 ஆயிரம் எஸ்ஐபி செய்து, 20 வருடங்கள் தொடர்ந்து செய்து வந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.6,32,29,587 உங்கள் கையில் இருக்கும்.
20 ஆண்டு கால எஸ்ஐபி முதலீட்டில், நீங்கள் முதலீடு செய்த தொகை வெறும் ரூ 48,00,000 மட்டுமே. அதே சமயம், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் நீங்கள் பெறும் தொகை ₹5,84,29,587. அதாவது, 48 லட்சம் ரூபாய் முதலீடு சுமார் 6 கோடியாக பெருகி இருக்கும்.
SIP ஐத் தொடங்கும்போது ஒரு குறிக்கோள் மற்றும் உத்தியைக் கொண்டிருப்பது முக்கியம். சிறு தடைகள் கூட இந்த முதலீட்டைப் பாதிக்கும். நீண்ட கால தொடர் முதலீடு வியக்கத்தக்க வருமானத்தைக் கொடுக்கும்.
நீண்ட கால முதலீடுகளில் தான் வருமானம் வேகமாக வளர்கிறது. அதிக மாதாந்திர பங்களிப்புகள் ஆரம்பத்தில் பயனுள்ளதாகத் தோன்றினாலும், குறுகிய காலத்தில் முதலீடு செய்வது எப்போதுமே அதிக வருமானத்தைத் தராது.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் எப்போதும் நிதி ஆலோசகரை அணுகி, சிறந்த பரஸ்பர நிதியத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். மேலும், முதலீடு உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரியான திட்டமிடல் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் SIP வரி-சேமிப்பு நிதிகள் மூலம் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வருமானம் மற்றும் வரியைச் சேமிப்பது ஆகிய இரண்டின் பலனையும் பெறுவீர்கள்.