புது டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் பெரிய மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 2020 ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஒரு வரலாற்று வெற்றியை எட்டியுள்ளது. டெல்லியின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 63 இடங்களில் ஏஏபி முன்னிலை வகிக்கிறது, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதே நேரத்தில், டெல்லி சட்டமன்றத்தை பாஜக மீண்டும் தோல்வி முகத்தை கண்டிருக்கிறது. டெல்லியில் 22 ஆண்டுகளாக அதிகார வறட்சியை எதிர்கொண்டுள்ள பாஜகவுக்கு, இந்த முறை ஒரு அதிசயம் நடக்கும் என நம்பிக்கை இருந்தது. ஏனெனில் கட்சி இந்த முறை பிரசாரத்தில் தேசிய பிரச்சினைகளை முக்கியமாக வைத்து ஓட்டு சேகரித்தது.
பாஜக தனது அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் அனைவரையும் டெல்லி பிரசாரத்தில் நிறுத்தியது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக பிரச்சாரத்தின் பொறுப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் தனது ஐந்து ஆண்டு காலம் சேவை மற்றும் வளர்ச்சியை அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரித்தார்.
ஆம் ஆத்மிக்கு நல்ல செய்தியை வழங்கிய டெல்லி மக்கள்:
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "டெல்லி மக்கள் 24 மணி நேரம் மலிவான மின்சாரம் கொடுப்பவருக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக வெற்றி பெறச்செய்த டெல்லி மக்களுக்கு நன்றி. டெல்லி ஒரு புதிய வகையான அரசியலை முன்னெடுத்துள்ளது. அதற்கு பெயர் வளர்ச்சி அரசியல். இந்த அரசியல் 21 ஆம் நூற்றாண்டை முன்னோக்கி எடுத்து செல்லும்.
அனுமனுக்கும் நன்றி தெரிவித்தார்
கெஜ்ரிவால் கூறுகையில், "இன்று செவ்வாய், அனுமன் ஜி தினம், அனுமன் ஜி இன்று தனது டெல்லியில் ஆசீர்வதித்துள்ளார். அனுமன் ஜிக்கு மிக்க நன்றி. மிக்க நன்றி. டெல்லியை ஒரு அழகான நகரமாக மாற்ற வேண்டும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் ஒன்றாக டெல்லியை அபிவிருத்தி செய்வோம்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.