கிருஷ்ண ஜெயந்தி கொண்டாத்தின் போது நடைபெறும் தஹி ஹண்டி நிகழ்ச்சியில் நடைபெறும் மனித பிரமிடுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மராட்டிய மாநிலத்த்தில் நடத்தப்படும் "தஹி ஹண்டி" எனப்படும் தயிர்ப்பானை உடைக்கும் நிகழ்ச்சியில் மனித பிரமிடுகள் அமைத்து, குறிப்பிட்ட உயரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் தயிர்ப்பானையை உடைப்பது வழக்கம். இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு வந்தனர்.
மும்பை ஐகோர்ட்டு 'தஹி ஹண்டி' நிகழ்ச்சிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, 18-வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இதில் ஈடுபடுத்த கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல் மனித பிரமிடு அமைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோட்டும் ஐகோர்ட்டு விதித்த உத்தரவை உறுதிசெய்தனர். இதனால், கிருஷ்ண ஜெயந்தி விழா மண்டல்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரி மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த ‘ஜெய் ஜவான் கிரிடா மண்டல் கோவிந்த பதக்’ தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, மனித பிரமிடுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று கூறியது.
மேலும் நீதிபதி கூறுகையில்:- நானும் மும்பையை சேர்ந்தவன் தான். இந்த தஹி ஹண்டி ஒலிம்பிக்கில் பங்குபெற்று விருதுகளை குவித்திருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இதுபோன்ற சமயச்சடங்குகள், அதில் பங்கேற்பவர்களுக்கு தீவிர காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் சில சமயங்களில் முதுகெலும்பில் கூட காயம் ஏற்பட்டு விடுகிறது என்றார். எனவே கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால் இன்று நடைபெற்ற தஹி ஹண்டி நிகழ்ச்ச்சியில் 20 அடி உயரத்துக்கு மேல் தயிர்ப்பானையை மற்றும் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது.