சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? அறிகுறிகள் என்ன?

Symptoms of Kidney Failure: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பல காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு பலருக்கு ஏற்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 24, 2025, 06:45 PM IST
  • சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்ன?
  • அதை எவ்வாறு தடுப்பது?
  • இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? அறிகுறிகள் என்ன? title=

Symptoms of Kidney Failure: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதும், நன்றாக செயல்படுவதும் மிக முக்கியமாகும். குறிப்பாக சிறுநீரகம் முக்கிய பல பணிகளை செய்கிறது. இதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பல காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு பலருக்கு ஏற்படுகின்றது. சிறுநீரக செயலிழப்பு என்பது ஒரு பொதுவான விஷயம் அல்ல. சிறுநீரகம் சேதமடைந்தால், அது முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அது ஒழுங்காக செயல்படவில்லை என்றால், அதனால், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்ற முடியாது. 

சிறுநீரக செயலிழப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை சிறுநீரகங்களை சேதப்படுத்தும். சிறுநீரகம் செயலிழந்தால், அதற்கான பல்வேறு அறிகுறிகள் உடலில் தோன்றும். இதற்கான புரிதல் இருப்பதும், இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவது மிகவும் முக்கியம். இதன் மூலம் சிறுநீரக செயலிழப்புக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய சிக்கல்களைத் தவிர்க்கலாம். 

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு தடுப்பது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள்

- சிறுநீரில் மாற்றங்கள்

- திடீரென எடை அதிகரிப்பது

- சிறுநீரகப் பகுதியில் கனத்தன்மை 

- சிறுநீரகப் பகுதியில் வலி

- கண்களுக்குக் கீழ் வீக்கம்

- கால்களில் வீக்கம்

- சுவாசிப்பதில் சிரமம்

சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் குவிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உப்பு குறைவாக சாப்பிட வேண்டும்: அதிகமாக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்: நீரிழிவு நோய் சிறுநீரக நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம்.

புகை பிடிக்க வேண்டாம்: அதிகமாக புகைபிடித்தல் நுரையீரலுக்கும் சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்: உடல் பருமன் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புனேவில் அதிகரிக்கும் அரியவகை நரம்பு நோய் - அறிகுறிகள், சிகிச்சை தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் படிக்க | வெற்றிலையில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..ஒரு வெற்றிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News