Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. குறிப்பாக தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாகி விட்டால், அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித உணவுமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
எடை இழப்பு உணவுமுறைகளில் இந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் உணவுகளில் ஒன்று அழற்சி எதிர்ப்பு உணவுமுறை. பல பிரபலங்கள் இந்த உணவுமுறையை பின்பற்றி உடல் எடையை குறைத்துள்ளனர். பல உடற்பயிற்சி பயிற்சியாளர்களும் இதை பரிந்துரைகிறார்கள். பல நிபுணர்கள் இதற்கான உணவுத் திட்டத்தையும் பகிர்ந்துள்ளனர். 7 விஷயங்களைக் கொண்டு எடையை சுமார் 25 கிலோ வரை குறைக்கலாம் என இவர்கள் கூறுகிறார்கள்.
Anti Inflammatory Diet
எடை இழப்பு பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு இந்த அழற்சி எதிர்ப்பு உணவுமுறை எவ்வாறு உதவும் என்பது பற்றியும், அதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
அழற்சி எதிர்ப்பு உணவுமுறை என்றால் என்ன?
அழற்சி எதிர்ப்பு உணவுமுறை என்பது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க உதவும் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டமாகும். யார் உடலில் வேண்டுமானாலும், வீக்கம் ஏற்படலாம். ஆனால் அது நீண்ட காலம் நீடித்தால், அது மூட்டுவலி, இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த வகை உணவில், வீக்கத்தைக் கட்டுப்படுத்த சில உணவுப் பொருட்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
எடை இழப்பில் உதவும் 7 உணவு வகைகள்
- பழங்கள் மற்றும் காய்கறிகள்
- ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகள்
- முழு தானியங்கள்
- மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்
- தாவரம் சார்ந்த புரதச்சத்து
- கிரீன் டீ
- புளித்த உணவுகள்
இந்த 7 உணவுகளையும் நம் அன்றாட உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, எடை இழப்புக்கும் வழிவகுக்கும். மேலும் கடுமையான நோய்களிலிருந்தும் இவை உடலைப் பாதுகாக்கும்.
எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
- பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- வெள்ளை ரொட்டி அல்லது சர்க்கரை போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட வேண்டாம்.
- சர்க்கரை பானங்கள் மற்றும் சோடாவை தவிர்க்க வேண்டும்.
- அதிகப்படியான மது அருந்துதல் கேடு விளைவிக்கும்.
- சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பீட்ரூட் ஜூஸ் இவர்கள் குடிக்கவே கூடாது.. அப்படிக் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா!
மேலும் படிக்க | தினமும் வெள்ளை எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ